Saturday, 28 June 2025

தெமிஸ் லீடர் கடிதம் – டெய்சி

 

கப்பல் களை சுமந்து செல்லும் கப்பல் 


   உங்களது இன்றைய தெமிஸ் லீடர் பதிவு வாசித்தேன் .விமானம் கிளம்பும் நேரத்தில் பயணிகள் வரலன்னா எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள்? சில விவிஐபி போன்றோர்கள் கிளம்பும் நேரத்தில்;தான் விமான நிலையத்திற்கே வருவார்கள் என்பதாக படித்திருக்கிறேன். கப்பல் கடலில் செல்ல அதன் வடிவமும் ஒரு காரணம்தானே? தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல் முன்புறம் கூர்மையாய் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இந்த கார் ஏற்றும் கப்பல்கள் கட்டிடம் போன்று செவ்வகமாக இருக்கிறதே. நீங்க விமானத்தில் எடுத்துக்கொண்டுபோன ஏதாவது பொருளை மறுத்திருக்கிறார்களா? ஏன்? கப்பல் வேலைக்கு வீட்டில் இருந்து கிளம்பும்போதே தூக்கம் இல்லாமல், குண்டான ஆட்கள் நடுவில் சாண்ட்விச்சாய் நசுங்கி எப்படா கப்பல்ல ஏறுவோம்னு ஆயிடுமா? பெருவிரல் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள நாளைய தொடரைப்பாருங்கள்.


டெய்சி திருச்சி

அன்புள்ள டெய்சி நலம் தானே,

  விமான பயணிகள் வரத்தாமாதமானால் விமானம் வானில் பறக்க தொடங்கிவிடும். கப்பல் கடலில்,மிதக்கவும்,பயணிக்கவும் வடிவம் மிக முக்கியம்.

பயணிகள் கப்பல்


   

  கப்பல்கள் நீரில் மூழ்கியிருக்கும் பகுதியை டிராப்ட் என்போம். இந்த வகை காரேற்றும் கப்பல்கள் பத்து மீட்டர் வரை நீரில் மூழ்கியிருக்கும். அதன் ப்ரீ போர்ட் எனப்படும் நீருக்கு மேலிருக்கும் பகுதிதான் மிக அதிகம் அதனால் கவிழ்ந்துவிடும் ஆபத்தும் உள்ளதுதான் ஆனாலும் அவ்வளவு எளிதில் கப்பல்கள் கவிழ்ந்துவிடுவதில்லை. அதன் வடிவம் அப்படி. எட்டாம் வகுப்பு இயற்பியலில் படித்திருப்பீர்கள் நீங்கள் சிறுமியாக இருக்கையில் கப்பலின் எடையை விட கப்பலால் வெளியேற்றப்படும் நீரின் எடை அதிகம் எனவே கப்பல் நீரில் மிதக்கிறது .

 எண்ணெய் கப்பல் (oil tanker)



  பிரவுன் நிற பெயின்ட் அடித்த பகுதி  சரக்கு நிறைத்தபின் நீருக்குள் செல்லும்.



   பத்து மீட்டர் டிராப்ட் உள்ள கப்பல் குறைந்தது பதினோரு மீட்டருக்கு மேல் ஆழமுள்ள கரைகளில்தான் கட்டமுடியும்.மிகப்பெரிய எண்ணை கப்பல்கள் இருபது மீட்டருக்கு மேல் டிராப்ட் இருக்கும்.

Pure car carrier 


  

   கப்பல்களில் பலாஸ்ட் எனப்படும் நீரை தேக்கி கப்பலில் எடையை கூட்டும் தொட்டிகள் உண்டு. கப்பல் சரக்கு நிறைத்திருக்கும்போது குறிப்பிட்ட அளவு  நீளுள் மூழ்கியிருக்கும்.கப்பலில் சரக்கு காலியாகும் போது கப்பல் மேலே வரும் கப்பலில் டிராப்ட் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் கடலில் பயணிக்க முடியும் எனவே கப்பல் காலியானதும் பாலாஸ்ட் தொட்டிகளில் நீரை நிறைத்து எடையை அதிகரிக்க வேண்டும். கப்பலின் சமநிலை தவறாமல் வைக்கவும் பாலாஸ்ட் மிக சரியாக செய்வது அவசியம். தவறான பாலாஸ்ட் செய்வதால் கப்பல்கள் கவிழ்ந்திருக்கின்றன

Container ship 


 2003 இல் முதல் பயணம் இதுவரை 113 விமானத்தில் பயணித்த எனது பொருட்களை எந்த நாட்டிலும் தடுக்கவில்லை. முதல்முறை பயணிப்பவர்கள் அறியாமல் கைப்பையில் கொண்டுவரும் மசாலா பொருட்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துவிடும் காட்சிகள் எல்லா பயணத்திலும் காண்கிறேன்.



  கப்பலுக்கு கிளம்பும்முன்வரை  நானே அனைத்தையும் செய்ய வேண்டும் என விரும்புவதால் எட்டுமணி ரயிலேறும்முன் ஏழரைக்கு வடசேரி சந்தையில் போய் ஒரு கிலோ தக்காளி வாங்குவது வரை. அதுபோக கப்பலுக்கு போகும்முன் தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும் கடலில் கடைகள்  இல்லையே. எந்த சான்றிதழையும் மறந்துவிடக்கூடாது அதனாலேயே வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே தூக்கம் இல்லாமல் ஆவது.



   உங்க யூகம் சரிதான் பெருவிரல் அடுத்த அக்கட்டுரையில் வருகிறது.

ஷாகுல் ஹமீது.


No comments:

Post a Comment