என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025.
டெக்கில் ரௌண்ட்சில் இருந்த காப்டன் ஆசுதோஷ் கவுல் பணியிலிருந்த காஸ் இஞ்சினியர் சதாசிவ்விடம் பிசியா என கேட்டுவிட்டு தோளில் கை போட்டு “இப்படியே ரெண்டு கேள்வி கேட்டுறேன்
கம்பிரசர் ரூம் ஸ்டார் போர்டு சைடில் சேப்டி செக் லிஸ்ட் எப்ப அப்டட் செய்தாய் எனக்கேட்டவர். தேதி தப்பாக இருக்கிறது சரி பண்ணிக்கோ” என திருத்தியுள்ளார்.
பன்னிரண்டு மணிக்குமேல் ஓய்வுக்கு வந்து மதிய உணவுக்குபின் தொழுகை முடித்து உறங்க போனேன். நான்கு மணிக்கு பணியிலிருந்த மூன்றாம் அதிகாரி ராகுல் போனில் அழைத்து. “ஷாகுல் ஜி மேனிபோல்ட் கார்க்கோ லீக்,குயிக்லி கம் டு டெக்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான். மூன்றரை மணிக்குதான் கார்க்கோ கொடுக்கும் பணி துவங்கியிருக்கிறது.
ஆடை மாற்றி டெக்கில் சென்றபோது கார்கோ நிருத்தபட்டிருந்தது. கப்பலில் குழாயுடன் டெர்மினலின் குழாயை பொருத்துவார்கள். அதை டெர்மினல் பணியாளர்களே செய்வார்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள் தொடவே கூடாது.டெர்மினல் குழாயில் ஒழுகல்.
கார்கோ லீக் என டெக் வாட்ச்மேன் சொன்னவுடன் தேவையே இல்லாமல் என்னை அழைத்துவிட்டான் ராகுல். எனது ஓய்வு நேரம் பன்னிரெண்டு முதல் ஆறு வரை. எமர்ஜென்சி என்றால் என்னை எப்போது வேண்டுமாலும் அழைக்கலாம் தான். இப்போது தேவையே இல்லாத அழைப்பு.டெர்மினல் பணியாளர்கள் வந்து சரிசெய்து கார்கோ முடியும் வரை அங்கிருக்க வேண்டியதாயிற்று.
முதன்மை அதிகாரி ஒவ்வொரு பம்ப்பாக இயக்கி சீராக வேகத்தை கூட்டினார். எல்லாம் சரியாக போக தொடங்கியது.
இங்கே கம்ப்ரசரில் வால்வுகளை மாற்ற சிங்கையிலிருந்து டெக்னீசியன் ஒருவர் வருகிறார். அவர் வந்ததும் அவர் செய்யும் பணிக்கு உடனிருக்க வேண்டும். இன்று நீண்ட நாளாக இருக்கும். கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் எடுத்துக்கொண்டனர்.
சமையல்காரர் காப்டன் ஆசுதோஷ் கவுலுக்கு கொடுப்பதற்காக புதிதாய் சாப்பத்திகள் செய்ய தொடங்கினார். “ரெண்டு மாசமா கொரியன்,சைனிஸ் கப்பல்லேயே சுத்திட்டு இருக்கதுனால சப்பாத்திய பாக்கவேயில்லன்னு சொன்னாரு” என்றார். காப்டன் ஆசுதோஷ் கவுல் கப்பலை விட்டு சென்றதை நான் பார்க்கவேயில்லை.
ஐந்துமணி வாக்கில் சிங்கை டெக்னீசியன் வந்தார். முதன்மை இஞ்சினியர் என்னை அறிமுகபடுத்தி “உங்களுக்கு வேண்டியது அனைத்தையும் ஷாகுல் தருவார்” எனச்சொன்னார்.
காஸ் இஞ்சினியர் உரிய வால்வுகளை மூட சொல்லிவிட்டு பணியை தொடங்க சொன்னார்.இரு கம்பிரசர்களில் வால்வுகளை மாற்றினார். புகைப்படங்கள் எடுத்து முதன்மை இஞ்சினியரிடம் ஒப்புதல் பெற்று உரிய ஆவணங்களில் முத்திரையும் கையெழுத்தும் பெற்றார் சிங்கை டெக்னீசியன் அஹமத். அவர் கப்பலிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு சைனாவில் உள்ள எங்கள் நிறுவன வேறொரு கப்பலுக்கு செல்வாதாக சொல்லி விடைபெற்றார்.
இரவில் பணி முடித்து ஒன்பது மணிக்கு உறங்க சென்ற காஸ் இஞ்சினியர் இரவு பன்னிரெண்டு மணிக்கு வந்து என்னை விடுவித்தார். குளித்து தொழுதுவிட்டு ஒரு மணிக்கு மேல் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு அழைப்பான் மணிஅடித்ததும் எழுந்தேன்.
குளித்து பஜர் தொழுகைக்குப்பின் சதாசிவ்வை காலை ஆறு மணிக்கு முன்பாகவே விடுவித்தேன். கார்கோ இறக்கும் பணி சீராக போய்க்கொண்டிருந்தது. இன்று கார்கோ நிறுவனம் அனுப்பும் ஒரு ஆய்வாளர் சிங்கையிலிருந்து வர வேண்டியுள்ளது. மிக குறைந்த ரிமார்க்ஸ்களுடன் பாஸ் ஆகியே வேண்டும்.
கொரியமுகம் கொண்ட வயதான ஆய்வாளர் விமான நிலையத்தில் இரங்கி எட்டு மணிக்கு நேராக கப்பலுக்கு வந்தார். சிங்கப்பூர் முஸ்லிம் என அவரது பாஸ்போர்ட் சொன்னது. உணவுகூடத்தில் மேஸ்மேன் “பிரேக் பாஸ்ட் என்ன வேண்டும்” எனக்கேட்டதும்.
“நத்திங் ஒன்லி மசாலா சாயா,லஞ்ச் இங்கே சாப்பிடுவேன்” என்றவர் உடனே காப்டன்,முதன்மை இஞ்சினியர்,முதன்மை அதிகாரியுடன் ஒப்பனிங் மீட்டிங் முடித்து ஆவணங்கள் சோதனையை தொடங்கினார். பத்து மணிக்கு டெக்கில் வந்தார்.கார்கோ டாங்க்ஸ்,ஓடிக்கொண்டிருக்கும் கார்கோ பம்ப்களின் பிரஷர் கேஜ்,பலாஸ்ட் தொட்டிகளின் ஏர்வென்ட்,மேனிபோல்ட் பிரஷர்கேஜ்,டெம்ப்பரேச்சர் கேஜ்,பூஸ்டர் பம்ப்,மோட்டார் அறை,கம்பிரசர் அறை,எமெர்ஜென்சி ஜெனரேட்டர்,எமர்ஜென்சி பயர் பம்ப்,லைப் போட் என அனைத்தையும் சோதித்தார். மிக அனுபவம் வாய்ந்த காப்டன் அவர் சீன கம்பனிக்காக பணிபுரிகிறார்.கையில் ஒரு செக் லிஸ்ட் வந்திருந்தார்.
மதிய உணவுக்குப்பின்(மிகக்குறைவாக உண்டார்) பதினைந்து நிமிட ஓய்வுக்குப்பின் இயந்திர அறையில் ஆய்வு,ஸ்டீயரிங் பிளாட்,பாய்லர்,பயர் பம்ப்,பின்னர் பிரிட்ஜில் லாக் புக்ஸ்,பெர்மிட் டு வொர்க் மற்றும் நேவிகேஷன் ஆவணங்கள் சரிபார்த்தார்.
மாலை நான்கு ஆய்வை முடித்து குளோசிங் மீட்டிங்.கம்பிரசர் அறை மற்றும் மேனிபோல்ட்டில் உள்ள எமர்ஜென்சி சட்டவுன் ‘O’ ஓபன் ‘C’ குளோஸ் எழுதியிருக்கவில்லை,பூஸ்டர் பம்ப் பிரஷர்கேஜ் பூஜ்யம் காட்டவில்லை. ஆவணங்களில் இரு இடங்களில் எழுதியது தவறு என ரிமார்க்ஸ் எழுதினார். எமர்ஜென்சி சட் டவுன் சிஸ்டத்தில் ஓபன்,குளோஸ் என எழுதி படம் பிடித்து காட்டியதை ஒத்துக்கொள்ளவில்லை. பூஸ்டர் பம்பின் பிரஷர் கேஜ் உடனே சரி செய்யப்பட்டது.
ஆய்வாளர் மூன்று ரிமார்க்ஸ் பதிவு செய்த சான்றிதழை முத்திரை பதித்து கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு ஐந்துமணிக்கு கிளம்பினார். இரவே விமானம் அவருக்கு.
மாலை மூன்று மணிக்கே கத்தாரில் நிறைத்த நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் புரொப்பேன் திரவத்தை கொடுக்கும் பணி முடிந்தது. டெர்மினல் ஊழியர்கள் குழாய்களை கழற்றினர். டெர்மினல் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு சான்றாக சர்வேயர் முன் கார்கோ மாஸ்டர் மற்றும் கப்பலின் காப்டன் ஒத்துக்கொண்ட ஆவணங்கள் கையெழுத்தானது.
கப்பல் ஆறு மணிக்கு புறப்பட பைலட் வரும் நேரம் உறுதியானது. நான் ஐந்து மணிக்கே ஓய்வுக்கு சென்றுவிட்டேன் ஆறு மணிநேர வேலை ஆறு மணிநேர சுழற்சி இம்முறை சரியாக அமையவில்லை இரு ஆய்வாளர்கள் ,கம்பிரசர் டெக்னீசியன் வந்ததால் இரு தினமும் பதிமூன்று மணிநேரத்துக்கு பணி செய்ததால் தூக்கம் குழம்பி போய் கிடந்தது.
கடுமையான கடல் சீற்றம் காரணமாக மாலை ஆறு மணி பைலட் ரத்தானது. மறுநாள் திங்கள்கிழமை மைலியோவ் துறைமுகம் மூடப்படிருந்து . மறு உத்தரவு வரும் வரை.
மறுநாள் மதியம் கொஞ்சமாக பேரலைகள் அடங்கியதும் மதியம் பன்னிரெண்டு மணிக்கு பைலட் கப்பலுக்கு வந்தார். கயிறுகள் அவிழ்க்கப்பட்டு டக் போட் உதவியுடன் கப்பலை பத்திரமாக வெளியேற்றி கடலில் விட்டபின் பைலட் இறங்கி சென்றார்.
காலியான கப்பல் பதினைந்து டிகிரிக்கு மேல் ரோலிங்கில் பயணத்தை தொடர்ந்தது. ஒரு நாள் பயணத்திற்குப்பின் ஹாங்காங்கில் கப்பலை நிறுத்தி எண்ணெய் நிரப்பியபின் ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகம் நோக்கி பயணிக்க வேண்டும் என உறுதியானது.
பிப்ரவரி மாதம் பதினெட்டாம் தேதி கப்பல் தைவான் சென்று சேர்ந்தது முதல் 24 ஆம் தேதி அங்கிருந்து புறப்படும் வரை உள்ள பதிவு இது.
நாஞ்சில் ஹமீது,
27-april- 2025.
sunitashahul@gmail.com
இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறோம் .
No comments:
Post a Comment