Sunday, 15 February 2026

அயன் பாக்ஸ்,- கடிதம் கணேஷ்

 அயன் பாக்ஸ்




வணக்கம் அண்ணா.


கொஞ்ச நேரம் முன்பு தான் ‘அயன் பாக்ஸ்’ பதிவைப் படித்தேன். சிறுகதைக்குறிய நேர்த்தியுடன் மிக அருமையாக இருந்தது.  


Forest Gump படத்தில்,  Forest ஓடிக்கொண்டே இருக்கும் போது பின்புலத்தில் வியட்நாம் போர், ஹிப்பி கலாச்சரம், அமெரிக்க அரசியல் மாற்றம் என ஏதேதோ நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். அதைப்போல ஒரு அயன் பாக்ஸை பின்புலமாக வைத்து - 90களின் வேலை இல்லா திண்டாட்டம், கல்ஃப் மோகம், 2000 களின் ஈராக் போர், மணமாகி,  தனிக்குடித்தனம், குழந்தைகள் பிறந்து, அந்த குழந்தைகளும் அந்த அயன் பாக்ஸை உபயோகிக்க ஆரம்பித்தது வரை ஒரு பத்து இருபது வருட கால ஓட்டத்தை அநாயசமாக தொட்டுச் சென்றிருக்கீர்கள்.


“கோளிக்க பீய வாரி போடசொன்னாலும் நான் ரெடி,ஒரு விசா கிட்டுனா போரும் என பாஸ்போர்ட் எடுத்து எப்படியாவது வெளிநாடு சென்றுவிட்டால் போதும் எனும் கனவில் இளைஞர்கள் இருந்த காலம்”


“ஒன்னுக்கும் களியாது கப்பல்ல எப்டி தான் வேலக்கி வெசிருக்கானுவளோ,நான் மட்டும் செகண்ட் இன்ஜினியரா இருந்தேன்.முதல்ல உம்மள தான் டிஸ்மிஸ் பண்ணுவேன்”  - படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களைப் போலவே அண்ணியாரும் நக்கலுக்கும் கிண்டலுக்கும் சற்றும் குறைந்தவரல்ல என்று எண்ணிக் கொண்டேன்.


சமீபத்தில் நான் மிகவும் ரசித்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று. 


நன்றி அண்ணா. 

கணேஷ்,

டாலஸ்.

No comments:

Post a Comment