பாயல்
ஒருநாள் நாங்கள் இரவு
உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டு
கொண்டிருந்தோம் .அப்போது அமெரிக்க ராணுவ உடையில் வந்த ஒரு இந்திய பெண் சப்பாத்தியா நான் கொஞ்சம் சாப்பிடலாமா? என
கேட்டு விட்டு பதில் கிடைக்கும் முன் உரிமையுடன் தட்டில் இருந்த சப்பாத்தியை
பிய்த்து சாப்பிட்டுவிட்டு நன்றி என்றாள்
.
அமெரிக்கபடையில் நிறைய
இந்திய வம்சாவளியினர் இருந்தனர் .சிலருக்கு இந்திய மொழிகளும் தெரிந்திருந்தது
. எங்களது முகாமில் நாங்கள் சென்று இரு
மாதங்களுக்கு பின் சந்தித்து தோழியான பெண் பாயல் ..
பாயல் தான் எங்களில்
ஒருவனிடமிருந்து சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டது .அன்று தான் முதல் சந்திப்பு
.எதுவும் பேசிக்கொள்ளவில்லை நன்றி என சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.
மெக்ஸிகோவில் பிறந்த
வீரர்கள் சிலர் நம்மை போல கொஞ்சம் காரம் சாப்பிடுபவர்கள்.மெக்ஸிகோவின் தட்பவெப்ப
நிலை தமிழ்நாட்டை போலவே இருக்கும் .அதனால் அதில் சிலர் எங்களிடம் நட்பாகி
எங்களுக்கு என சமைக்கப்படும் கறியை வாங்கி செல்வார்கள் .எங்கள் சமையல்காரர்களும்
இன்முகத்துடன் அவர்களுக்காக தனியாக
எடுத்து வைத்து அவர்கள் வரும் வேளையில் கொடுப்பார்கள் .
சிலர் தமிழில் கோளி
கொலம்பு நல்லா இர்க்கு நன்டி என சொல்லி செல்வர் .சில தினங்களுக்கு பிறகு மீண்டும்
உணவு கூடத்தில் பாயலை சந்தித்தேன் .
ஹாய் என்றாள்.
இன்று சப்பாத்தி இல்லையா ,
இல்லை என்றேன் .
சிரித்துகொண்டே தன்னை
அறிமுகம் செய்துகொண்டு .இங்கு இவ்வளவு இந்தியர்கள் பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி
என்றாள் .இந்திய கலாச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன் .எனவே
பழக ஆர்வமாயிருக்கிறேன் என்றாள்.இந்திய மொழி எதுவும் பேச தெரியாது என்றாள்
ஆங்கிலத்தில் .வெல்கம் என வரவேற்றோம் .
அடுத்த சில தினங்களில் நாங்கள் இரவுணவு
சாப்பிடும்போது எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதும் .ஒவ்வொருவருடைய ஊர் அது
எங்கிருக்கிறது என்பன போன்ற நிறைய கேள்விகாளாக கேட்டுகொண்டே இருப்பாள் .எல்லாம்
நிறைய விசயங்களை அறியும் ஆர்வ கோளாறுதான். இந்தியர்களையும் இந்திய கலாசாரத்தையும்
பெருமையுடன் பேசிக்கொண்டிருப்பாள் .
ஒருநாள் உணவை எடுத்து கொண்டு சாப்பிடும்
மேஜையில் அமர்ந்துகொண்டு லோகேஷ் வருவதற்காக சாப்பிடாமல் காத்திருந்தோம் அப்போதும்
பெருமையாக சொன்னாள். நண்பனுக்காக காத்திருக்கும் பண்பாட்டை .
பாயல் பணியில் இருந்தது
முக்கிய அரண்மனையில் .ராணுவ கமாண்டோ அங்கு தான் இருந்தார் .பாதுகாப்பு மிகுந்த
இடம் நாங்கள் அங்கு செல்ல அம்னுமதியில்லை .
பாயலிற்கு 24 மணிநேரம்
தொடர்ந்து வேலையும் பின் இரு நாள் முழு ஓய்வும்
.பணியில் இருக்கும் நாளில் சாப்பிட வருவதில்லை .அவள் தங்கியிருக்கும் அறையில்
மேலும் 5 ஆண்கள் தங்கி இருப்பதாகவும் .குளியலறையும் ,கழிப்பறையும் அவர்களுடன்
பகிர்ந்து கொள்ளும் வகையில் இருப்பதாகவும் சொல்வாள் .
பின்பு என்னுடனும்
,கார்த்திக்குடனும் மிக நெருங்கிய நட்பாகி விட்டாள் .தினமும் சந்தித்து உரையாட
தவறுவதில்லை .இரவில் எட்டுமணிக்கு முன்பே வந்து விட்டால் .கார்த்திக் இரவு
பணியிலிருப்பதால் 9 மணிக்கு தான் செல்லவேண்டும் .அதனால் நாங்கள் தங்கும்
கூடாரத்தில் அமர்ந்து அரட்டை அடித்து
கொண்டிருப்பாள் .சீக்கிரம் பணி முடியும் நாட்களில் நானும் இணைந்து கொள்வேன் .
மற்றவர்கள் பாயலின் ரைபிளுடனும் ,அவளுடனும் புகைப்படம் எடுத்து கொள்வர்
.அவளது தாய் மொழி குஜராத்தி .அவளுக்கு தெரிந்த ஒரு சில குஜராத்தி வார்த்தைகளில் குஜராத்தியர்களுடன் பேசி
சிரிப்பாள்.பெங்காளி ஒருவனிடம் எனக்கு பெங்காலியில் ஒரே ஒரு வார்த்தை தெரியும்
என்றாள். அமி துமிசே பாலே பாஷி (ஐ லவ் யூ ).தன்னுடைய தோழியின் காதலன் பெங்காலி என்பதால்.அந்த ஒரு வார்த்தை மட்டும் தெரியும்
என இப்படி வயிறு வலிக்க சிரித்த நாட்கள்
பல .
கூடாரத்தில் அமர்ந்து
பேசிகொண்டிருக்கும் போது 9 மணிக்கு பகல் பணி முடிந்து நண்பர்கள் வந்து ஆடை மாற்றி
ஜட்டியுடன் கூடாரத்தினுள் உலாவி கொண்டுதான் குளியலறைக்கு செல்வார்கள் பலர் .அதனால்
9 மணி நெருங்குவதற்கு முன்பே .அக்கா பசங்க வர நேரமாகிவிட்டது கிளம்பு என்போம்
.பொறு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது .இரவு பணியாளர் செல்லும் போது செல்கிறேன்
என்பாள் .வலு கட்டயமாக கூடாரத்திலிருந்து வெளியேற்றுவோம் .
சில நாட்களில் 9 மணிக்கு
பிறகு கூடாரத்திற்கு வெளியே உள்ளே விளக்கு தூணின் கீழே நின்று பத்துமணி வரை பேசிக்கொண்டுதான்
செல்வாள் .
தன்னுடைய பணியிடத்தில் எந்த
பிரச்னையும் இல்லை .என்னுடைய பாஸ் மிக நல்லவர் (மூத்த அதிகாரி ) .தங்குமிடத்தில்
சில டார்ச்சர்கள் இருக்கிறது.என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் என்னைவிட கொஞ்சம்
உயர் பதவியில் இருப்பவர்கள் எனவே நான் உங்களுடன் இருக்கும் நேரங்களில்
மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதிகமாக உங்களுடன் தான் பேசுகிறேன் .ஷாகுல் என்பாள்
.
அவளுக்கு திருமணம் ஆகியிருந்தது .கணவனை
பற்றியும் ,ஈராக்கில் இந்தியர்களுடன் கிடைத்த நட்பை பற்றியும் அவரிடம் சொல்லி
இருக்கிறேன் என்பாள் .தீபாவளியன்று எங்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு,
கார்த்திக் தீபாவளி சுவீட் எங்கே என கேட்டாள்.அவன் பதிலுக்கு சிரித்தான்.சிரித்தால்
போதாது காரட் அல்வா எனக்கு வேண்டும் செய்து தா என்றாள் .கார்த்திக்கிற்கு அதை
செய்ய தெரியாது .இருந்தாலும் சமாளித்தான்.
விடவில்லை பாயல் காரட்டை
சிறியதாக சீவ வேண்டும் ,நெய்யும் ,பாலும் வேண்டும் அவ்ளோ தான் .இதெல்லாம் இங்கே
எளிதாக கிடைக்கிறதே .நான் நாளை சாப்பிட வருவேன் என்று சொல்லி சென்றாள்.
அன்றிரவே கார்த்திக்
ஏலக்காய்,நெய் மணம் வீசிய நல்ல சுவையான
காரட் அல்வா செய்து யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தான் .மறுநாள் பாயல் வந்த போது
தான் அதை கொண்டு வந்து தந்தான். தனக்கு பிடித்த இனிப்பு காரட் அல்வா ,தீபாவளி
தினத்தன்று அது கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்திருந்தாள்.கார்த்திக்குடன்
இருகைகளையும் குலுக்கி நன்றி கூறினாள் .
ஒருநாள் வந்து கவலையுடன்
அமர்ந்திருந்தாள்.இரண்டு நாட்கள் முகாமைவிட்டு வெளியே பயிற்சிக்காக செல்ல
வேண்டியுள்ளது .முகாமில் இருப்பது தான் பாதுகாப்பு வெளியே செல்லும்போது
தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டும் .குறிப்பாக
ராணுவ வாகனங்களை குறி வைத்து தாக்குவார்கள் என சொன்னாள்.அடுத்த சில
தினகளுக்கு நாம் சந்திக்க இயலாது போய் வருகிறேன்.மகிழ்ச்சியுடன் இருங்கள் பை என சொல்லி விட்டு சென்றாள்.
பாயலுடன் எங்கள் நட்பு மிக
நெருக்கமாகி விட்டது .அவள் வரமுடியாத நாட்களில் பகல் பொழுதில் வந்து நாங்கள்
பணியில் இருப்பதால் ஒரு ஹாய் மட்டும் சொல்லி சிரித்துவிட்டு செல்வாள் .
அது குளிர் காலம்
தொடங்கியிருந்த சமயம் .அப்போது ஒருநாள் காலை உணவுக்கு வந்தவள் என்னை சந்தித்து
.ஷாகுல் குளிருக்கான வெப்ப ஆடைகளை அணிந்து வந்துவிட்டேன் .இப்போது ரொம்ப சூடாக
இருக்கிறது எனக்கு ஆடை மாற்ற வேண்டும் என்னை உங்கள் தங்கும் கூடாரத்தினுள்
அழைத்துசெல் என்றாள் .
நீங்களே போகலாமே என் படுக்கை அருகில் மறைவான
இடம் இருக்கிறது போய் வாருங்கள் என்றேன் .வேண்டாம் நான் தனியாக போவது சரியில்லை நீ
என்னுடன் வா .இரவு பணி முடிந்த உன் அனைத்து நண்பர்களும் உள்ளேதான் இருப்பார்கள்
.நான் மட்டும் தனியாக செல்வது ...........வேண்டாம் என்றாள் .நான் உள்ளே அழைத்து
சென்று தள்ளி நின்று கொண்டேன்.ஆடை மாற்றியபின் ராணுவ சீருடையின் உள்ளே அணியும்
வெப்ப ஆடையை என்னிடம் தந்து இங்கே வைத்துகொள் இரவில் சந்திக்கும்போது
வாங்கிகொள்கிறேன் .மிக்க நன்றி என கூறி சென்றாள்.
ஷாகுல் ஹமீது ,
21-10-2016
அழகான பதிவு
ReplyDeleteநட்பை மிக அழகாக பதிந்திருக்கிறீர்கள் இதில். என்ன சொல்வது ”ஆண்பால்,பெண்பால் அன்பால்” என்பதைத்தவிர?
தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான்மட்டும் யார் உண்கிறானோ, அவன் பாவ பிண்டத்தைத்தான் உண்கிறான்' என்கிறார் பகவான் கிருஷ்ணன்.
எத்தனை எத்தனை பகிர்தல்கள் உங்களுக்கு இந்த போர்முனையில் சாத்தியமாகி இருக்கின்றது இல்லையா தம்பி. கொடுத்து வைத்தவர் நீங்கள்
இதுபோன்ற நேரடி அனுபவங்களில் நீங்கள் மானுட ஆன்மாவை தரிசித்திருக்கிறீர்கள் மிக மிக அருகில். உங்களிண் எழுதுக்களின் வழி அந்த தரிசனம் எங்களுக்குமே சாத்தியமாகின்றது
நன்றி அனைத்திற்கும். தொடர்ந்து எழுதுங்கள்
சாகுலின் அனுபவங்களை அந்த இந்திய வம்சாவழி பென்னின் நம்பகத்திற்கு பாத்திரமான சாகுலின் இயல்பை ஆண்பால்,பெண்பால் அன்பால்” என்பதைத்தவிர? என அழகாக கருத்திட்டமையில் உங்களின் எண்ண ஓட்டமும் இயல்பாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளது நன்று
Deleteநன்றி முத்து
Deleteமுத்து இந்த தலைப்பில் நான் தற்போது ஆனந்த விகடனில் தொடர் ஒன்று மிக விரும்பி வாசிக்கிரேன் . ஷாகுலின் பதிவைப்படித்ததும் எனக்கு அதுவே நினைவிற்கு வந்ததால் உடன் எழுதினேன்
Deleteபாயலுடன் எங்கள் நட்பு மிக நெருக்கமாகி விட்டது
ReplyDelete