காபதுல்லாஹ்
கடந்த ஜனவரி மாதம் இருபதாம் தியதி சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலுள்ள புனித காபாவை
தரிசிக்கும் வாய்ப்பை அந்த ஏக இறைவன் தந்தான் .
எனது தாயுடன் |
எனது தாயும் ,சகோதரியுடனும் மிக சிறப்பாக உம்ரா கடமையாற்றினோம் .
எனது தாய்க்கு கடந்த 2012
ம் ஆண்டு இடது கால் மற்றும் 2014 ம் ஆண்டு
வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது .அனைவரின்
பிரார்த்தனைகளினால் ஏக இறைவன் எங்களது பயணத்தையும் உம்ரா ,தவாப் மற்ற அமல்களை
எளிதாக்கி வைத்தான் .
கடந்த இருபதாம் தியதி அதிகாலை
இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து எட்டு
மணிக்கு ஓமான் ஏர்லைன்சில் மஸ்கட் வழியாக நீண்ட
விமான பயணம் செய்து ஜெத்தா நகரை அடைந்தோம்.
மாலை ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரத்துக்கு மேல் பேருந்தில் பயணம் செய்து மெக்காஹ் நகரை அடைந்தோம் .
மாலை ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரத்துக்கு மேல் பேருந்தில் பயணம் செய்து மெக்காஹ் நகரை அடைந்தோம் .
அறைகளுக்கு சென்று பயண பைகளை
வைத்துவிட்டு இரவு உணவும் ,இஷா தொழுகையும் முடித்துவிட்டு உம்ரா செய்வதற்காக ஹரம்
ஷெரிப் ன் கிங் பகத்(GATE NO 79 KING FAHAD ) வாயில்
வழியாக உள்ளே நுழையும்போது நள்ளிரவு மணி 12 ஐ
நெருங்கியிருந்தது .
உம்ரா
கடமையை முழுமையாக செய்து முடிக்கையில் அதிகாலை மூன்று மணி.
பழக்கமே இல்லாத நீண்ட விமான
பயணம்.(எங்கள் குழுவில் எங்கள் இருவரை தவிர அனைவருக்கும் முதல் விமான பயணம்) இரு
இரவுகள் தூக்கமின்றி மிக களைப்புடன் தான் சென்று சேர்ந்திருந்தோம் .
காபாவை சுற்றி ஏழு முறை நடந்து தவாபும் ,வாஜிபான இரண்டு ரக்காத் தொழுகையும் ,சிறிது ஸம் ஸம் நீர் அருந்திவிட்டு ,சபா ,மர்வா மலைகளுக்கிடையில் ஏழு முறை நடந்து கடமையை நிறைவேற்ற அந்த இறைவனே சக்தியை தந்தான் .11 நாட்கள் மெக்கா விலும் 4 நாட்கள் மதீனாவின் மஸ்ஜிதுல் நவபியிலும் அமல்கள் செய்துவிட்டு இறையருளால் கடந்த 6 தியதி அனைவரும் நலமுடன் ஊர் வந்து சேர்ந்தோம் .எல்லா புகழும் இறைவனுக்கே .

மஸ்ஜிதுல் அல் நபவி மதீனா |
இரண்டு கால்மூட்டுகளும் மூட்டுமாற்று
அறுவை சிகிச்சை செய்த எனது தாய் இறை அருளால் இதை சிறப்பாக செய்ய முடிந்தது . எனவே இயலாதவர்கள்
என யாருமில்லை .எண்ணத்தை வையுங்கள் இறைவன் அனைவருக்கும் உம்ரா மற்றும் ஹஜ்
செய்வதற்கான வாய்ப்பை தருவான் .
கபாதுல்லாஹ் உலக முஸ்லீம்களின்
சங்கமம் எனும் தலைப்பில் இதை விரிவாக எழுதி எனது வலை பூவில் பதிவேற்றம்
செய்யவிருக்கிறேன்.
ஷாகுல் ஹமீது ,
09-02-2017.