Saturday, 14 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள் - கடிதம் டெய்சி

 


சரியான நேரத்தில் நல்ல ஒரு பதிவு. விலையுயர்ந்த கார்களை பாண்டிச்சேரியில் பதிவு செய்தால் ஏதோ வரி குறையும் என்று அங்கு செய்வதுபோல கப்பல்களுக்கும். பதிவு செய்வதில் இருக்கும் கட்டாயமான வழிமுறைகள் என்பது அதன் பாதுகாப்பிற்காகத்தான் இல்லையா? ஆனால் அந்த நச்சுப்பிடித்த வேலையை ஏன் செய்துகொண்டு என்று பனாமா போன்ற நாடுகளில் பதிவு செய்து சட்டம் இயற்றுபவர்களை, பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துபவர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி கப்பல் சொந்தக்காரர்கள் மிகப்பெரும் புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்திற்கு நெறி கட்டுவது போல இந்த பாதிப்புகள். குரூட் ஆயிலில் இருந்து பிளாஸ்டிக் வருகிறதாம் அதனால் அதுவும் கிடைக்காதாம். இப்படிஒன்று, பெட்ரோல் போட வந்த கூட்டத்தை போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும் அளவிற்கு போய்விட்டது. எங்கு என்னப் பெரிய நிகழ்வுகள் நடந்தாலும் பாதிக்கப்டுவது என்னவோ நம்மைப்போன்றவர்கள்தான். நேற்று சந்தையில் காய்கறிகள் கொள்ளை மலிவு. அதன் ரகசியம் இப்போதுதான் தெரிகிறது.

டெய்சி, திருச்சி 



No comments:

Post a Comment