Thursday 1 October 2020

மாய இருக்கை (முதுகு வலிக்கு)

 

                முதுகுவலிக்கு மாய இருக்கை.

   நானறிந்த பெண் ஒருத்தி இரு கால்களும் ஊனமுற்றவர் .காலிப்பர் மற்றும் ஊன்று கோல் உதவியுடன் கொஞ்சம் நடப்பார் .

  அதிலுள்ள சிரமங்களை நானறிவேன் .நாள் முழுவதும் அணிந்தே இருப்பதால் காலில் அழுத்தி வலியும்,சில நேரம் புண்ணாகும் வாய்ப்பும் உண்டு .அந்த காலிப்பர் மிக சரியான அளவுடனும்,வடிவத்துடனும் அமையவில்லையெனில் அதை அணிவதில் சிரமங்கள் மட்டுமே எஞ்சும்.வாய்பேச முடியாத குழந்தையின் நோயை கண்டறிந்து மருத்துவம் பார்ப்பதற்கு சமம் மாற்று திறனாளிகளின் கை கால் களுக்குக்கான உபகரணங்களை உருவாக்குபவர்களின் திறமை .

   அவளிடம் கேட்டேன் “காலிப்பர் சரியாக உள்ளதா” என .

“இல்லை அண்ணா நான் சொல்லது அவனுக்கு  மனசிலாகல்ல, எப்பவும்  தப்பாத்தான் செய்து தாறான். இப்ப நானே படிச்சிட்டு எனக்கு வேண்டியதை நான் செய்தேன்” என்றாள்.ஆம் சில நேரங்களில் அப்படிதான் நமது பிரச்சனைகளை ,வைத்தியர்கள் சரியாக புரிந்துகொள்ள கொள்ள மாட்டார்கள் .பொதுவான மருந்துகள் ,எல்லோருக்கும் தீர்வாகாது .ஆயர் வேதத்தில் வைத்தியர் நாடி பிடித்து பார்த்துவிட்டது அந்த நோயாளிக்கான மருந்தை அவரே செய்வார் .(சேருமானத்தில் வித்தியாசம் உண்டு )


 


   கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் நண்பர் கே பி வினோத்தின் இல்லம் சென்றிருந்தேன் .தக்கலை தாண்டி பத்மனாபபுரம் அரண்மனையின் பின்புறம் கோயில்,குளம் தென்னையும் ,வாழையும் மீண்டும் குளம் அருகில் வீடு என இயற்கை அன்னையின் மடியில் வாழ்கிறார்.


 


 

 

  உடல் ஆரோக்கியம் சார்ந்து நண்பர்கள் என்னிடம் சில ஆலோசனைகள் கேட்பது உண்டு .நான் ஒரு யோகா ஆசிரியர்.சில பயிற்சிகள்,உணவில் ஒழுங்கு,சில பழக்கங்களை விட்டாலே பெரும் நோய்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழும் முறைகளை சொல்லி தந்திருக்கிறேன் .


 

முதுகுவலிக்கு நான் சொல்லி கொடுத்த,பயிற்சிகள் ,அமரும் முறைகளை ஒழுங்காக பின்பற்றி வலி இல்லாமல் வாழும் சிலர் இருக்கிறார்கள் .முதுகு வலிக்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் முதுகெலும்பின் முப்பத்தி மூன்று முள்லும்புகளும் அமுங்குவது (கம்ப்ரெஸ்) ஏற்படுகிறது .

  முதுகு வலிக்கு பல காரணங்கள் உண்டு ,தவறான,அதிக உயரமுள்ள,காலணிகள் ,நீண்ட நேரம் நின்றே வேலை செய்பவர்கள் சமநிலையில்இல்லாமல் ஒற்றை காலில் நிற்பது ERGONOMICS எனப்படும் தவறான அமரும் முறை  ,இருக்கைகள்.WORKING POSTER எனப்படும் தவறான  முறையில் எடைகளை தூக்குதல் போன்றவையும் .

 அமர்ந்தே பணிசெய்யும் நண்பர்களுக்கு  நான்  சொல்வது ஒவ்வொரு ஐம்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு பிறகும் ஐந்து நிமிடம் எழுந்து உலாவிவிட்டு வாருங்கள் என .ஆனால் ஆசிரியர் ஜெயமோகனிடம் உங்களால் அப்படி முடியாது என்றேன்.படைப்பாளிக்கு அது சாத்தியமே இல்லை .இன்று கணினி துறையிலும் வேறு அலுவலகங்களிலும்  பணி செய்யும் நண்பர்கள் ஒரு நாளில் பதினாறு மணிநேரம் வரை வேலை செய்பவர்களை நான் அறிவேன் .இதில் தன்னை மறந்து  சில மணிநேரங்களாவது இருப்பவர்களால் தான் உருப்படியாக ஒரு வேலையை முழுமை செய்யவோ,ஏதாவது படைக்கவோ இயலும் .

அவர்களில் சிலர் வலியோடும்,மன உளைச்சலோடும் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் .அவர்களுக்கான தீர்வு தான் மாய இருக்கை.

  நண்பர் கே பி வினோத் கணினி துறையில் அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு .தற்போது சென்னையில் இருந்து பணிபுரிகிறார் .சில ஆவண படங்களை இயக்கியுள்ளார் .உதவி இயக்குனர் .விரைவில் தமிழ் திரையுலகுக்கு நல்ல திரைப்படங்களை தருவார் .

அரண்மனை போன்ற அமைப்புடைய அவருடை வீட்டில் அவரை சந்தித்தபோது .தனது முதுகு வலிக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தீர்வாக அமரும் ஒரு இருக்கையை அவரே வடிமைத்து சோதித்து பார்த்துள்ளார் .சில மாதங்களுக்கு பின் முதுகு வலி போய்விட்டது.ஆம் அது நிரந்தர தீர்வு.ஒரு படைப்பாளியால் மட்டுமே அதை உருவாக்க முடியும் .

அவர் என்னிடம் சொன்னது “ஹாஜியாரே ,நம்மோ இருக்கும்போ,ஸ்பைனல் கார்டு போய் செயருல இடிக்குது ,இத பாருங்கோ இது நானே யோசிச்சு செய்தது ,இதுல ஓட்டை கிடக்குதுனால ஸ்பைனல் போய் இடிக்காது ,இப்போ சுத்தமா வலியில்லை ஹாஜியாரே”என்றார் .

 நாம் அமரும் இருக்கைகளில் நமது மூலாதாரம் பதிந்து இருக்கும் அதனால் ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருப்பதால்.வலிக்கு காரணி ஆகிறது .கே பி வினோத் செய்துள்ள இருக்கையில் முலாதரம் (end of the spinal cord)படாதவாறு ஒரு சிறு இடைவெளி விட்டுள்ளார் .


 


  அமர்ந்தே வேலை செய்யும் நண்பர்கள் ,கணினித்துறை,எழுத்தாளார்கள்,அலுவலகத்தில் பணி செய்பவர்கள் இது போல் ஒரு இருக்கை செய்து பயனடையுங்கள் வலி இன்றி வாழுங்கள் .அதிக செலவு இல்லை .

ஷாகுல் ஹமீது ,

01 oct 2020.

sunitashahul@gmail.com

1 comment:

  1. உண்மை தான் காக்கா! சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நாடி பிடித்து நோயைக் கணிக்கும் வழியைக் குறித்து வேலுதாத்தா மொழிய சிறுவனாக இருக்கும் போது கேட்டிருக்கிறேன். அதில் நாடியின் நடையை வாத, பித்த, கப நடை என்று பிரித்துப் பார்க்க இயலும். தாத்தா அதற்கு தகுந்த மருந்துகள் பரிந்துரைப்பதையும் அவரது கடையில் இருக்கும் போது பார்த்திருக்கிறேன். (குறிப்பாக மீனவ சமூகத்தினர்).

    ReplyDelete