உண்ணி சாருக்கு அஞ்சலி
03-04-2016 ல் காலை
சுமார் பத்து மணிக்கு நண்பர் வேலுபிள்ளை
இந்தியா வந்ததை அறிந்து தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது தம்பி ஷோபனின் கைபேசி
எண் கிடைத்தது அழைத்தபோது அவரால் பேச
இயலாமல் மல்லி டீச்சரின் கணவர் ரமேசிடம் கொடுத்துவிட்டார் .
உண்ணிசாருக்கு நெஞ்சுவலி எனவும் ராமச்சந்திரா
மெடிக்கல் காலேஜில் சேர்த்திருந்து உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் நெஞ்சுவலி
வந்து மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்துகொண்டிருப்பதாக சொன்னார் .
மறுநாள் காலையில் வேலுபிள்ளையிடம் உண்ணிசாரின்
உடல்நலம் விசாரிப்பதற்காக அழைத்தபோது முந்தையநாள்
மதியம் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி
கேட்டு பெருந்துயருற்றேன் .
எனக்கு
12 வயதிருக்கும்போது பாபூஜி பள்ளியில் உண்ணிசார் பூபந்து விளையாடுவார்
என்னிடம் ஒரு மட்டையை தந்து களத்திற்கு வெளியே அடிக்கப்படும் பந்துகளை எடுத்து கொடுக்கவேண்டும் .அவர்கள் விளையாடி முடித்தபின் சிறிதுநேரம்
எனக்கு விளையாட சொல்லிதருவார்கள் .
பூபந்து விளையாட்டில் அவரை
தேர்ந்த நிபுணர் என்றே சொல்லலாம் .களத்தில் சட்டை அணியாமல் அவரது சற்று கனத்த உடலை
வைத்துகொண்டு மிக லாவகமாக பந்துகளை அடிப்பது இப்போதும் என் கண்முன் காட்சியாகிறது ,
மனோகரன் மாமா ,முட்டாய் ஜாகிர் மற்றும் சிலருக்கு உண்ணிசார்தான் குரு .
மாநில
அளவிலானா பூபந்து போட்டிகளை
அவர்கள் இணைந்து நடத்துவார்கள்.
பூபந்து மட்டையின் அறுந்த கட்ஸ்களை வீட்டில்
வைத்து அவர் நேர்த்தியாக கட்டுவதை பார்த்திருக்கிறேன் .அது திறமையானவர்கள்
மட்டுமே செய்ய இயலும் என்பதை நான் வாலிபன்
ஆன பின்தான் தெரிந்து கொண்டேன் .
எனது 19 வது வயதில் அவருடன்
இணைந்து களத்தில் விளையாடிய அனுபவம் மறக்க இயலாது .
பாபூஜி பள்ளியில் தலைமை கிளார்க்காக 30 ஆண்டுகளுக்கும்
மேலாக பணிபுரிந்துள்ளார் ,அவர் பிறரிடம்
அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை .அனைவருடனும் அன்பும் ,நல் மதிப்பும் உள்ளவர் .
எங்களது குடும்பத்துடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது .அவர்கள்
நாகர்கோயிலில் புதிய வீடு கட்டி குடியேறியபோது (1995 என
நினைவு )நான் ,பாபு மற்றும் நண்பர்கள்
சென்றிருந்தோம் .
எனது சகோதரியின் திருமணத்திற்கு முந்தைய நாள்
(1997 மார்ச் 4 ல்) உண்ணிசார் தனது இளைய மகன் ஷோபானுடன் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வந்து
சிறப்பித்தார்கள் .எனது அண்ணனின் திருமணத்திலும் கலந்துகொண்டார்கள் .
எனது
நெருங்கிய நட்பான மல்லன்பிள்ளை மாமாவின் மகள் லதாவை உண்ணிசாரின் மருமகன்
சிவம் அவர்கள் திருமணம் செய்தபோது அவர்களுடன் நெருக்கம் மேலும் அதிகரித்தது .
வேலுபிள்ளை பார்ட்னராக இருக்கும் ஹரிகிருஷ்ணா
ஆட்டோ மொபைல்ஸ் திறப்புவிழாவிற்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு நான்
மனைவி சுனிதாவுடன் சென்றிருந்தேன் .
உண்ணிசாரிடம் நானும் வேலுபிள்ளையும் அமெரிக்காவில் சந்தித்ததைப்பற்றி கூறியபோது மிக உற்சாகமாக இருந்தார் .திருவனந்தபுரதிலிருந்து
வந்திருந்த வேலுபிள்ளையின் மனைவியின்
பெற்றோர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .அப்போது நினைக்கவில்லை அதுதான் நான்
அவரை கடைசியாக சந்திக்கிறேன் என .
கடந்த 4 ம் தியதி
காலையில் அவரது உடலைத்தான் குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில் பார்க்க முடிந்தது .அவரை இழந்து வாடும் அவரது
குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ,அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
அவருக்கு
மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு .மூவருக்கும் திருமணம்
ஆகிவிட்டது .வேலுபிள்ளை எனக்கு நீண்டகால நண்பர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில்
பணிபுரிகிறார் ,ஷோபன் சென்னையில் பிரபல வக்கீல் .
உண்ணிசாரின் இயற்பெயர் பத்மநாபன் என்பது
பலரும் அறியாதது .
ஷாகுல் ஹமீது .
அண்ணா.... நல்ல பதிவு....
ReplyDeleteதொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்......
சரவணன்.சி
நன்றி சரவணன்
Delete