வேண்டுகோள்
கடந்த பதினான்காம் தியதி எழுதிய பதிவில் (கொரோனா பிழைக்குமா)கடைகள் அனைத்தும் அடைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சிலர் சொன்னதுபோலவே முழு அடைப்பை இருபத்திஒரு நாட்களுக்கு மக்கள் நலன்கருதி அரசு அறிவித்தது .
நிலைமையை புரிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நமக்கும் ,நாட்டுக்கும் நல்லது .இன்று நான்காவது நாள் வெளியில் செல்லவேயில்லை . திருவனந்தபுரம் -நாகர்கோவில் சாலையை ஒட்டியே எனது வீடு இருப்பதால் சாலையில் செல்லும் வாகனங்களை பார்க்கிறேன் .இருசக்கரம் ,கார்கள் ,ஆட்டோ என மக்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள் .என்ன தேவையோ தெரியவில்லை ?இப்போது நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்
இன்று உறவினர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும்போது அவர் சொன்னது .
"ஐநூறு ரூவா கைல இருந்தது ,அது கொண்டு போய் மருந்து ,கீரை ,சாதனம் கொஞ்சம் வாங்கினேன். தீந்தது ஐநூறு .பைசா உள்ளவனுக்கு ,வெச்சி சாப்புடலாம் .நமக்கு ?வீட்ல ரேசன் அரிசி இருக்கு தீருது வர அத கஞ்சி வெச்சாவது குடிக்கலாம்" என்றார்.
நாமறிந்து பெரும்பாலும் தினசரி உழைத்து பிழைப்பவர்கள் தான் இங்கே அதிகம் அவர்களின் நிலைமை மிக கஷ்டம் இப்போது .அதனால் இருப்பவர்கள் உங்கள் அருகில் உள்ள இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்து உதவுங்கள் ,பொருளாகவோ ,பணமாகவோ .
பெரும்பாலோர் யாரிடமும் எதுவும் கேட்கமாட்டார்கள் .நாமே அவர்களது சூழ்நிலை அறிந்து உதவுவது கடமையென நினைத்து செய்வோம் .இல்லாதவர்களுக்கு உதவுவதற்கு இது ஒரு நல் வாய்ப்பு என இந்த சூழ்நிலையை பயன்படுத்திகொள்வோம் .கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொள்வோம் .பொருத்தமான குறள் ஒன்று நினைவுக்கு வந்தது .
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
ஷாகுல் ஹமீது ,
28-2020
Sands Casino & Hotel | Entertainment | Slots - Seattle
ReplyDeleteWelcome to the latest in entertainment with septcasino our lively lineup of slot หาเงินออนไลน์ games, video poker, table games, blackjack, bingo, craps, 인카지노 roulette, keno and more!