கொரானா பீதி
கடந்த இருதினங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து கேரளம் வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கேரள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமறை அளித்தது. மால் கள், திரை அரங்குகளை் மூட வும் உத்தரவு பிறப்பித்தது.
நேற்று காலை முதல் திருவனந்தபுரம் சாலைகள் , தம்பானூர் ரயில் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது. கடைகளில் வியாபாரம் பாதித்துள்ளது.
நேற்று எனது கடைக்கு நான்கு பேர் மட்டுமே பொருள் வாங்க வந்தனர்.
அருகில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ராஜாவின் தேநீர் விடுதியில் யாருமே இல்லை. இன்றுதான் அவரது கைபேசியை திறந்து பார்க்க நேரம் அமைத்து கொடுத்தது
கொறோனா.
மாளவிகா ஃபேன்ஸி ஸ்டோர் சேச்சி ""இந்து இது வர கைநீட்டம் விற்றில்லா"" என்றார் மதியம் ஒரு மணிக்கு.
நாகர்கோயில் திருவனந்தபுரம் ரயிலில் காலை எட்டு மணிக்கு பள்ளிவிளை ரயில் நிலையத்திலிருந்து ஏறினால் வண்டி காலியாக இருக்கும். ஆளூர், இரணியல், பள்ளிவிளை தாண்டி குழித்துறை வரும்போது அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடும் தமிழக எல்லை முடிந்து கேரளம் துவங்கும் பாறசாலை ரயில் நிலையத்தில் இன்னும் பெருங்கூட்டம் ஏறும். நான்கு பேர் மட்டுமே அமரும் இருக்கைகளில் "சகலம் தள்ளி இரு" என கூறி நம் தொடை மேல் குண்டியை வைத்து இயல்பாக பயணம் செய்யும் ஆண்களும் பெண்களும் இங்கு உண்டு.
திருவனந்தபுரம் செனட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிய பின்பும் படிக்கட்டுகளில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் காத்திருந்து தான் ஏறி கடக்க முடியும்.
இன்று பள்ளிவிளை ரயில் நிலையம் வந்தபோது வண்டி போய் விட்டதோ? என எண்ணினேன். ரயில் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.
எட்டுபேர் இருக்கும் இரு இருக்கைகளில் மூவர் மட்டுமே.
தம்பானுர் -வழுதகாட் செல்லும் பேருந்தின்
பெண் நடத்துநர் முக கவசமும,் கையுறையும்
அணிந்து சீட்டுகளை கொடுத்து கொண்டிருந்தார்.
ஜிம் மற்றும் ப்யூட்டி பார்லர் களும் இன்று அடைத்துவிட்டார்கள் .
மாலை வேளையில் கடைக்கு வந்த வியாபாரி சங்க தலைவர் திங்கள் முதல் அனைத்து கடைகளும் அடைக்க அறிவிப்பு வரும் சாத்தியம் உள்ளது என்றார்.
சாகுல் ஹமீது.
14-3-2020

No comments:
Post a Comment