உடல் ஆரோக்கியம் தரும் குறிப்புகளை எழுதும்படி என்னிடம் சிலர் வேண்டியதுண்டு .நேற்று மாலையில் எனது கப்பலில் இரவுணவாக ஆயத்த புறோட்டவை வைத்திருந்தார் சமையற்காரர் மெர்வின்.
சாதாரணமாக புறோட்டா மைதாமாவில் செய்யப்படும் ஒரு உணவு .மைதாவுடன் ,பால்,சீனி,நெய் அல்லது டால்டா,பாமாயில் ,தண்ணீர்,உப்பு கலந்து நன்கு பிசையவேண்டும் .பிசைந்தமாவை அரைமணிநேரம் கழித்து சிறு உருண்டையாக பிடித்துக்கொள்ளவேண்டும் திருப்பதி லட்டுபோல இல்லாமல் நாகர்கோயில் ராமலக்ஷ்மி ஸ்வீட்ஸ் லட்டுபோல்,ஒரு கிலோ மாவில் இருபத்தைந்து என்ற அளவில் உருண்டையக்கினால் சரியாக இருக்கும் .பின்னர் உருண்டைகளை வட்டமாக தட்டி, சுத்தமான மேசையில் எண்ணை தடவி இரு இருகைகளாலும் வீசி சுருட்டி வைக்கவேண்டும் .மீண்டும் வட்டமாக தட்டி சூடான கல்லில் சுட்டு இருகைளாலும் அதை அடித்து பஞ்சராக்கி வைத்து பரிமாறினால் சுவையாக இருக்கும் புறோட்டா .
இங்கு விஷயம் புறோட்டா எப்படி செய்வது என்பதல்ல .மைதாவில் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு கெடுதல்களை செய்யும் அதனால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நான் புறோட்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் .
இந்த ஆயத்த புறோட்டா என்பது மேற்கூறியதுபோல் செய்து குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கிறார்கள் .நீண்டநாள் கெட்டுபோகாமல் இருக்க உரிய ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்த்தால் தான் நீண்ட நாட்கள் இருக்கும் .பின்னர் அது நுகர்வோரின் கைகளுக்கு சென்று மீண்டும் சூடாக்கி உண்ணப்படுகிறது .
எந்த உணவையும் சமைத்தபின் மீண்டும் சூடாக்கினால் கெடுதல்தான் .அதிலும் ரசாயனங்கள் கலந்த பாதார்த்தங்களை சமைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து மீண்டும் சூடாக்கினால் அது விஷத்தன்மை உடையதாக மாறிவிடும் .
எனக்கு சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி உண்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது .அது தெரியாமல் மிக அவதிப்பட்டேன் .நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் கண்டுபித்து சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி உண்பதை தவிர்த்தபின் நலமாக உள்ளேன் .இப்போது எல்லா ஊர்களிலும் ஆயத்த புறோட்டா ,சப்பாத்தி,பிரியாணி ,இட்லி போன்றவை கிடைக்கிறது. சமைக்க சோம்பல்பட்டு இவைகளை சூடாக்கி சாப்பிடும் மனிதஇனம் கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு தெரிந்தே தன்னை பலிகொடுப்பது தவிர்க்க இயலாது .
கப்பலில் உணவு கொஞ்சம்பிரச்சனைக்கு உரியதுதான்.கப்பல் பயணம் எதிர்பாராமல் கரைதொடாமல் நீண்டுவிடும் வாய்ப்பு அதிகம் எனவே குறைந்தது இரண்டு மாதத்திற்க்கான உணவு பொருட்களை வைத்திருக்கவேண்டியது காப்டன் மற்றும் சமையற்காரரின் பொறுப்பு .பொதுவாக புத்தம் புதிய காய்கள் வாங்கிய பதினைந்து நாட்களுக்கு மேல் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தாலும் அழுகிவிடும் .எந்த ஒரு பொருளும் நீண்டநாள் கெட்டுபோகவில்லை என்றால் அதில் அதிகப்படியான ரசயானம் கலந்துள்ளது உறுதி .
கீரைகள் வாங்கும்போது புழு பூச்சிகள் கடித்ததையே வாங்குகள் .பார்க்க அழகாக,புழு,பூச்சிகள் கடிக்கதாவை அதிக ரசாயனம் தெளிக்கபட்டவை என்பது உறுதி.
கப்பலில் இருக்கும் இறைச்சி,மீன் மற்றும் காய்கறிகள் ஆண்டுக்கணக்கில் குளிர் சாதனபெட்டியில் பாதுகாக்கப்பட்ட பின்னரே அடுமனைக்கு வருகிறது.அதிலும் பெரும்பாலானவை காலாவதியாகும் தியதிக்கு சற்று முன் கப்பலுக்கு அனுப்பிவைத்து காசு பார்கின்றனர் கப்பலுக்கு உணவு விநியோகிக்கும் வியாபாரிகள்
கப்பலில் வரும் இந்த ஆயத்த புறோட்டா எவ்வளவு நாட்களுக்கு சமைத்து பதப்படுத்தினார்களோ,கப்பலுக்கு வந்தபின் இங்குள்ள குளிர் அறையில் சில மாதங்கள் .அது நெடுகாட்கள் கெட்டுபோகாமல் இருக்க உடலுக்கு கெடுதல்தரும் ரசயானங்கள் எவ்வளவு சேர்த்தார்களோ .உடல் நலம் விரும்புபவர்கள் இயன்றவரை அளவாக சமைத்து நான்கு முதல் ஆறு மணிநேரத்திற்குள் உண்டுவிடுங்கள் .எந்த சமைத்தஉணவையும் குளிர் சாதன பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடாதீர்கள் ,அது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம் .
இன்று கலப்படமில்லாத உணவு பொருட்கள் மிக குறைவு ,எதை தவிர்ப்பது ,எதை உண்பது என குழப்பமான ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.குறிப்பாக அசைவ உணவுவகைகளை உறுதியாக தெரியாத வெளியிடங்களிலுள்ள உணவு விடுதிகளில் தவிர்ப்பது நல்லது.
கடந்த நவம்பர்மாதம் கிழக்கு ஆப்ரிக்காவின் டோகோ விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டி காத்திருந்தேன் .மதியவேளை அந்த ஊர் விமானத்தில் சாப்பிட என்ன கிடைக்கும் என தெரியாது.எனவே விமான நிலைய உணவு கடைகளை வட்டமடித்தேன்.ஒரு கடையில் வெள்ளை சாதம் இருப்பது கண்டேன் .(சாம்பார் ,பருப்பு,அயில மீன்கறி ஒன்னும் கிடைக்காது)கண்ணாடி பெட்டியில் கையால் சுண்டி அது வேண்டுமென்றேன்.அங்கிருந்த கறுத்த குண்டான பெண்மணி கடையின் உள் பக்கம் சென்று ஒரு வெள்ளைசாத பொட்டலத்தை கொண்டுவந்தாள்.அதை சூடாக்கும் பொருட்டு மைக்ரோ ஓவனில் வைக்க தயாரானபோது சூடாக்க வேண்டாம் என்றேன் .மிக குளிர்ச்சியாக இருக்கும் சாப்பிட இயலாது என்றாள்.உடன் மூளை உஷாராகி வேண்டாம் என தவிர்த்துவிட்டு .வெட்டி வைத்திருந்த பழங்களை வாங்கி சென்றேன் .
அந்த சாதம் முன்பே சமைத்து பாதுகாக்கப்பட்டது .எவ்வளவு நாட்களுக்கு முன்போ .விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் அடுமனைகளில் சமைத்த உணவுகளை மைனஸ் முப்பத்தியாறு பாகைகளுக்கு கீழ் பாதுகாக்கப்பட்டு பின்னர் பலநாட்களுக்கு பின் விமானம் பறக்கும் நாளில் சூடாக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது .விமானத்தில் ஒசுல கிடைப்பதனால் நள்ளிரவு பயணத்திலும் தேவையே இல்லையென்றாலும் வாங்கி சாப்பிடுவதை பழக்கமாக்கிகொண்டுள்ளோம் .
எந்த உணவையும் சமைத்து நான்கு மணிநேரத்தில் உண்டு தீர்த்துவிடுங்கள் .நல்லதையே உண்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம் .
ஷாகுல் ஹமீது,
14 September 2018.

👍 difficult to follow, but good info
ReplyDeleteநன்றி சாகுல் மத்தவங்க சொல்றதை விட நீங்க சொல்லும்போது அதற்கு வலிமை அதிகம்
ReplyDelete