எனது நண்பன் சுரேசுக்கு தான் எழுதிய முதல்
நாவல் ஒளிர்நிழல் ,முதல் சிறுகதை தொகுப்பு நாயகிகள்,நாயகர்கள்
ஆகியவற்றுக்காக சிறந்த அறிமுக எழுத்தாளர்
விருதை வாசகசாலை, தமிழ் இலக்கிய விருதுகள் பெருமையுடன் வழங்குவதாக அறிவித்துள்ளது கண்டு
எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன் .வாழ்த்துக்கள் சகோதரா .
சுரேஷை நான் கொல்லிமலையில் ஜெயமோகன் அவர்கள் நடத்திய புது வாசகர் சந்திப்பில் முதன்முறையாக
சந்தித்தேன் .அது முதல் தொடர்கிறது அவருடன் நட்பு .
ஜெயமோகனின் தளத்தில் வரும் சுரேசின் கடிதங்களின் மொழி என்னை மெய்சிலிர்க்க
வைக்கும் .பெருஞ்சுழி என அவரது இணைய பக்கத்தில்
எழுதினார் .
அப்போதே என்னையறிந்தவர்களிடம் நான் சொல்லிகொண்டிருந்தேன் .தமிழின் மிக
முக்கியமான படைப்பாளி உருவாகிறார் என .
அதை அவரது முதல் நாவல் ஒளிர்நிழல் உண்மையாக்கியது .
கடந்த வாரம் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்
ஒரு அமர்வில் வாசகர்களை சந்திக்கும் நல்வாய்ப்பை பெற்றார் .அது அவரது முதல் மேடை
.என்னால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று .
இந்த வாரம் அவரது முதல் படைப்புக்கான விருதை பெறுகிறார் .நண்பன் சுரேசுக்கு
எனது வாழ்த்துகளும் அன்பும் .உனக்கு நண்பன் என்பதில் பெருமைகொள்கிறேன் .
ஷாகுல் ஹமீது ,
23-12-2017
No comments:
Post a Comment