Tuesday, 11 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 11

11. சதாமின் அரண்மனையில்

திக்ரித்,  சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி,  எல்லை தாண்டினால் துருக்கி.  ஐரோப்பாவைஒட்டியிருப்பதால்  பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கிகொண்டிருக்கும்.


இங்கு  குளிர் காலத்தில் மைனஸ் இரண்டு டிகிரி வரையும், கோடையில் அதிகபட்ச வெப்பம் நாற்பத்தியாறு டிகிரிக்கும்சென்றுவிடும். இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையில் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்னாலும், கோடையில் மீண்டும் ஒருமணிநேரம் முன்னேயும் நகர்த்திவிடுவர். கோடையில் ஐந்துமணிக்கெல்லாம் சூரிய உதயமும், இரவில் ஒன்பது மணிக்குஅஸ்தமனமும் இருக்கும். மாலைநேர மகரிப் தொழுகை ஒன்பது மணிக்கு பிறகே. குளிர் காலத்தை குளிராடைகளை அணிந்துசமாளித்து விடலாம், கோடை தான் கடினம்.  அதிகாமாக தண்ணீர் குடிப்பதனால் பசியிருக்காது. அதனால் தேவையான உணவுசாப்பிடாமல் உடலில் போதிய சக்தியும்  இருக்காது.

குவைத்,ஈரான்,சவூதி அரேபியா,துருக்கி,சிரியா,ஜோர்டான் என ஈராக்கை சுற்றி ஆறு  நாடுகளும், உம்காசர்,பஸ்ரா போன்ற பெரிய துறைமுகங்களும் இன்னும் சில சிறு துறைமுகங்களும்  உள்ளத.இந்த நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் என்பேன். யூப்ரடிஸ் , டைகிரிஸ் என வற்றாத இரண்டுநதிகளும், எண்ணை வளமும் மிகுந்த நாடு ஈராக் .

 அது செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி.  இரண்டாண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வானுயர்ந்த இரட்டைக்கோபுரம் தரைமட்டமான  காட்சிகளை  அமெரிக்கர்களுடன் நாங்களும் தொலைக்காட்சியில்பார்த்துக்கொண்டிருந்தோம். அனைவரது  முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது. இரவில் துயிலில்,  விமானங்கள் மோதி  இரட்டைகோபுரங்கள் சிதைந்த காட்சிகள் கண்களிலிருந்து அகல மறுத்தது.

இரு தினங்களுக்குப்பின் பதிமூன்றாம் தேதி காலையில், அடுமனைக்கு இரவுணவுக்கு தேவையான பொருட்களை கொடுத்துகொண்டிருந்தோம். எப்போதும் காலைவேளை எங்களுக்கு பரபரப்பாக இருக்கும். காலை ஒன்பதரை மணியளவில்  சப்தம் கேட்டுவெளியே வந்து பார்த்தோம்.  நாங்கள் தங்கும் கூடாரம் தீப்பற்றி எரியத் தொடங்கியிருந்தது. அனைவரும் அதை நோக்கியே ஓடினர் .

நான் வேகமாக அடுமனைக்குள் சென்று, அங்கிருந்த தீ அணைப்பானை எடுத்து வந்தேன். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியதொடங்கியிருந்தது. கடும் வெப்பம் அருகில் நெருங்கவே முடியவில்லை. என் கையில் இருந்த தீ அணைப்பனால் எதுவும் செய்யஇயலவில்லை. இரவு பணி முடித்தவர்கள் உள்ளே தூங்கிகொண்டிருந்தனர். என் நண்பன் கார்த்திக்கும் அதில் ஒருவன் .

 தீ எரியும் போது ஷேவிங் கீரீம் மற்றும் டப்பாவில் அடைத்த வாசனை திரவியங்கள் அச்சமூட்டும் பெரும்சப்தத்துடன் வெடித்தது.  முதல் கூடாரம்  முழுமைகயாக எரிந்து முடிந்து , அதையொட்டியிருந்த இரண்டாவது கூடாரமும்  தீ பற்றி எரியத் தொடங்கியது.  அருகிலேயே பார்த்துக்கொண்டு இருந்த எங்களால் எதுவும் செய்யமுடியாத நிலை. என் மனம் கூடாரத்தினுள்ளே தகரஅலமாரியில் இருக்கும் எனது சான்றிதழ்கள் எதுவும் ஆகக் கூடாது என தவித்துக்கொண்டிருந்தது.

 இரண்டாம் கூடாரத்தில் தான் எங்கள் முகாமின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கணிணி மற்றும் முக்கிய பொருட்கள்அங்கிருந்தது.  தீ எரிந்து கொண்டிருக்கும்போதே இங்கிலாந்தை சேர்ந்த டெர்ரி ஆண்டர்சன்,  எனது ப்ராஜெக்ட் மானேஜர்  கணினிமற்றும் பொருட்களை வெளியே கொண்டுவர கூடாரத்திற்குள் சென்று விட்டார். நல்ல வேளையையாக ஆஸ்திரேலியாவின் டாமியன் அவரை தடுத்து வெளியேற்றினார்.இராண்டாவது கூடாரமும் முழுவதுமாக எரிந்து முடிந்தது. கூடாரம் அமைக்க பயன்படுத்தும் துணி சில ரசாயனங்களால் சலவைசெய்யப்பட்டது, தரைப்பகுதி எடைகுறைந்த இலகுவான மரப்பலகையால் ஆனது. ஆகையால் தீ பற்றியதும் வேகமாக பரவி அனைத்தையும் முழுமையாக சாம்பலாக்கி விட்டது .


 கண்முன்னே,  என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின்அனுபவ கடிதங்கள், இன்னும் சில நினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு,கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில்  சாம்பலாகிவிட்டது. சற்று முன்பு வரை நிறைய உடமைகளுடன் இருந்த நான், உடுத்திருந்த துணியும், கால்சட்டை பையில் இருந்த கைக்கடிகாராமும்தவிர வேறொன்றும் இல்லாமலாகிவிட்டேன் .

என்னைப் போல் அறுபது பேரின் கடவுச்சீட்டுகளும், உடமைகளும்   தீக்கிரையாகிவிட்டது. இருந்தாலும் என்னைப்போல் யாருக்கும்பெருத்த இழப்பு இல்லை. அனைத்து சான்றிதழ்களும் காலி. கூடாரம் இருந்த இடம் வெட்டவெளியாக கரியும் சாம்பலுமாக,புகைந்துகொண்டிருந்தது. முழுமையாக தீ அணைந்தபின் கூடாரத்தினுள் சென்று எனது படுக்கையை அடையாளம் கண்டுஅதனருகிலிருந்த தகர அலமாரியில் அப்போதும் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என தேடினேன்.

இரும்புக்கட்டில்களும், தகர அலமாரியும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. அதன் முன்பு தரையில் அமர்ந்து இரண்டு மணிநேரம்அழுதிருப்பேன். அதுபோல் என் வாழ்வில்  எப்போதுமே நான் அழுததில்லை. பலரும் என்னை சமாதனாபடுத்தினர். ஒரு ராணுவ வீரன்நான் அழுவதை பார்த்து , டாலர்களை கையில் தந்தான். பணம் எனக்கு வேண்டாம் என்றேன். அதை நான் சம்பாதிக்க முடியும். என்கவலையெல்லாம் நான் இழந்த சான்றிதழ்கள் மட்டுமே. பலரும் அலமாரியில் இருந்த குவைத்திய தினார் மற்றும் அமெரிக்க டாலர்எரிந்ததற்குத்தான் கவலைப்பட்டனர்.

நண்பன் கார்த்திக் மற்றும் இரவு பணி முடிந்து உள்ளே தூங்கிகொண்டிருந்தவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியேவந்து விட்டதால் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை. அதுதான் ஆறுதல். கார்த்திக்கு கையில் கிடைத்தது முக சவரம் செய்யும்பொருட்கள் அடங்கிய ஒரு பை. முருகன் மட்டும் அதிர்டசாலி.  தீ பிடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் தற்செயலாக கூடாத்தினுள் சென்றவன் தன்னுடைய அனைத்து உடமைகளையும் வெளியே கொண்டுவந்து விட்டான்.

 பின்பு அங்குள்ள பள்ளிவாசலின் முன் புறத்தில் அமர்ந்திருந்தேன். அங்கு தொழுகை நடத்தும், என்னையறிந்த ஒரு மூத்த ராணுவஅதிகாரி “ஷாகுல், ஆர் யூ ஒகே” என கேட்டார் .”நோ” என்றேன் . “எல்லாம் சரியாகிவிடும். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்”என்றார். அப்போது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனும் கீதையின் வரிகளை என்னால் ஏற்றுகொள்ள இயலாத நிலை அது.

ஆனால் நான் பிரார்த்தனை செய்தேன். நிலநடுக்கம்,பெருவெள்ளம்,பெரும் தீயில் குடிசைகள் சாம்பலாகி ,புயல்,சுனாமி போன்றஇயற்கை சீற்றத்தினால் சில நிமிடங்களில் அனைத்தையும் இழந்து, அனாதைகளாக மனிதன் நடுதெருவுக்கு வந்து விடுகிறான். அந்தநிலைமை இந்த உலகில் எந்த உயிருக்கும் வரகூடாது என்றே பிரார்த்தனை செய்தேன்.

அடுத்த அரைமணிநேரத்தில் மேற்பார்வையாளர் ஒறேன்ஸ் வந்தார். தலைமை சமையற்காரர் பணிக்கு சென்றுவிட்டார். மதியஉணவு கொடுக்கவில்லை. இரவு உணவு கொடுத்தே ஆக வேண்டும் என அழைத்தார். நிறையப்பேர் நாங்கள் இனி பணிக்குவரமாட்டோம் என்றார்கள். மானேஜர் டெர்ரி ஆண்டெர்சன் வந்து அனைவரிடமும் பேசி பணிக்கு வரும்படி கெஞ்சினார். சிலர்பிடிவாதமாக வரமுடியாது என்றனர் .

நானும் மற்ற சிலரும் அடுமனைக்குள் வேலைக்கு சென்றோம். அன்று மட்டும் மையோனஸ் தடவிய ஹாட் டாக்கும், எண்ணையில்பொரித்த பிரெஞ்ச் பிரைஸ் என குறைவான உணவை சீக்கிரமாகவே தயாரித்து கொடுத்துவிட்டோம். அருகிலிருந்த முகாமிலிருந்துவந்திருந்த நியூசிலாந்து அதிகாரி, இரவு தூங்குவதற்கு தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியை துவக்கியிருந்தார். நானும்அவர்களுடன் இணைந்துகொண்டேன் . மாலையில் குளித்தபின், எனக்கு கிடைத்தது ஒரு போர்வை.  அதை இரண்டாக கிழித்துநானும் லோகேசும் உடுத்திக் கொண்டோம். அப்போதே ராணுவ வீரர்கள் பலரும் தங்களிடமிருந்த உடைகளை கொண்டுவந்துஉதவினர். வெற்றுடலாய் இருந்த எனக்கும் ஒரு மேலாடை கிடைத்தது.


அன்றிரவு,  நாங்கள் நூறுபேர் படுப்பதற்கான கட்டில்களை ராணுவ கமாண்டோ தந்து உதவினார். அது ராணுவ வீரர்களுக்கானது.அதை சிறிதாக மடக்கி எங்கும் எளிதில் எடுத்துசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது . இரவில் இந்திய தாய் தந்தைக்குமகளான அமெரிக்க ராணுவ வீராங்கனை  மராத்தியை தாய்மொழியாக பேசும் ஆர்த்தி கதம் எங்களை தேடிவந்து ஆறுதல்சொன்னாள். எனக்கும் , கார்த்திக்கிற்கும் நல்ல தோழி அவள். அன்றிரவு,  இரவு பணியாளர்களிலும் சிலர் பணிக்குச் செல்லவில்லை. உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது.  அனைவரும்தற்காலிக கூடாரத்தில் கிடைத்த உடைகளுடன் துயில சென்றோம். கண்களை மூடினால்,  கூடாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது காட்சியானது .
ஷாகுல் ஹமீது
11-10-2016.

Thursday, 6 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 10


சுக்கிரியாவை  தேடிய கமல்

  

திக்ரித்   முகாம்,நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன்,  வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு,  போர்முனை ஊக்கத்தொகை வாரம்தோறும் நாற்பத்தியைந்துடாலர்கள் அனைவருக்கும் கையில் கிடைத்ததால் பெரும்பாலானோரின் கையில் விலையுயர்ந்த புகைப்படக்கருவி, இசை கேட்கும்கருவி, மடிக்கணினியை விட சற்றே  சிறிய எல் சி டி கருவிகள் என அரண்மனை முகாமில் உற்சாமாக நாட்கள் நகரத்தொடங்கியிருந்தது.

        மொத்தம இருந்த நூறுபேரில்,  எழுபத்தியைந்து பேர் திருமணமாகதவர்கள்.  என்னை போல திருமண வயதை அடைந்தவர்கள்t  தான் அதிகம்பேர் அங்கிருந்தோம்.  இங்கு வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது.  இரண்டாயிரத்தி ஒன்று செப்டம்பர் பதினொன் றில்,  அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தரைமட்டமானதில், உல்லாச கப்பலுக்கு தேர்வாகி இருந்தும்அமெரிக்க விசா கிடைக்காமல்  இந்த வேலைக்கு வந்தவர்கள், நீண்ட நாட்கள் வேலை கிடைக்காதவர்கள், தான் விரும்பிய வேலைகிடைக்காததால் ஏஜென்ட் அனுப்பிவைத் தவர்கள் என.

அந்நியதேசத்தில். சாப்பிடும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் மொழி வாரியாக தான் குழுமி இருகின்றனர். பெங்காலிகள்ஒரு கூட்டம், ஹிந்தியும்,மாரத்தியும் பேசுபவர்கள் ஒன்றாக ஒரு கூட்டம் ,கோவா அன்பர்கள் தனிகூட்டம், கொஞ்சம் ஒத்துப்போகும் தமிழும் மலையாளமும் ஒரு கூட்டம். தென் மாநிலத்தவர்கள் தான் அதிகமாக வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர் எனத்தோன்றுகிறது. வடமேற்கு, வடகிழக்கு மாநிலத்தவர் எவரும் இல்லை. மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல்,நாகலாந்து போன்றமாநிலத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.

எங்களுக்கு என, எழுபது அங்குல தொலைக்காட்சி ப் பெட்டியுடன்,  தனி தொலைக்காட்சி அறை ஒன்று தந்தார்கள். தினமும்ஹிந்தியும், ஆங்கிலப் படமும் போடுவார்கள். அப்போது தமிழ் , மலையாளிகள் ஒன்றிணைந்து தங்கள் மொழி படம் வேண்டும் எனவாதிட்டார்கள். பிரச்சனை பெரிதானபோது வாரத்தில் புதன், வியாழக்கிழமை இரண்டு நாட்கள் ,தமிழும் ,மலையாள படமும் எனமுடிவானது . கிருஷ்ணன் தான் அதற்கு பெரிய முயற்சி எடுத்துகொண்டார். புதன்,வியாழனில்“சேட்டா எதேங்கிலும் ஒரு படம் இடனும், இல்லங்கிஅவ மாரு வேற சினிமா இடும்” என்பார்.  நம்முடைய நாளை அவர்களுக்கு விட்டுகொடுக்ககூடாது என்பதால், கிருஷ்ணன்ஏதாவது ஒரு படத்தை போடுவார்.  அவரது சகாக்கள் ஐந்துபேர் எப்போதும் அவருடன் இருப்பர் .
ஆனால் நான் பார்த்தவரையில் பெரும்பாலனவர்கள் தமிழ்,மலையாள படங்களை  அதன் கதைக்காக பார்க்கின்றனர். இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படம் கோவா அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

ஸ்டோர்ஸில், கமலஹாசன் மட்டும் இரவு பணியில் இருப்பார். நாங்கள் பத்து பேர் பகலில் அடுமனைக்கு தேவையான அனைத்துபொருட்களையும் கொடுத்துவிட்டு செல்வோம் எனினும், தினமும் இரவில் சமையல்காரர்கள்    ஏதாவது பொருட்கள் தேவையெனஆழ் துயிலில் இருக்கும் எங்களை எழுப்புவதால், விடுபட்ட பொருட்களை கொடுக்க கமலை இரவு பணியில் அமர்த்தினோம். இரவுஒன்பது  முதல் காலை ஒன்பது வரை  கமல் பணியில் இருப்பார் .
நான் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு  கூடாரத்தை விட்டு வெளியே வந்தபோது கமல்  “அண்ணே இந்த சுக்கிரியாஎங்கண்ணே இருக்கு எல்லா கண்டெய்னர்லயும் தேடிப் பாத்துட்டேன்” என்றான்.  “உனட்ட கேட்டது யாரு கமல்” என நான் கேட்டதற்கு,  “அந்த பெங்காலிதான் கேட்டான்” என பதில் சொன்னான் .
இங்கு வேலை செய்த தமிழர்கள் பலருக்கும் ஹிந்தி தெரியாது. அதில்  கமலும் ஒருவன். ஒருநாள்  அவனைக் கலாய்க்க அவனிடம்சுக்கிரியாவை  கேட்டுள்ளனர் ,பாவம் இரவு முழுவதும் தேடி இருக்கிறான்.  நாற்பது அடி நீளமுள்ள நாற்பது கண்டெய்னர்களில்சுக்கிரியா அவனுக்கு கிடைக்கவேயில்லை.கமலும், முருகனும் கேம்ப் பாயாக இருந்தவர்கள். அவர்களின் கடின உழைப்பை கண்ட எங்கள் முகாமின் தலைமை அதிகாரி டெர்ரிஆண்டெர்சன் அவர்கள் இருவரையும் பதவி உயர்வுகொடுத்து  ஸ்டோர்ஸ்க்கு அனுப்பி வைத்தார் .

முருகன் இருபத்திநான்கு வயதை பூர்தியடையாதவன். தமிழை தவிர வேறு மொழி தெரியாது , ஆனால் திறமைசாலி. எளிதில்எதையும் புரிந்து கொள்வான். கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவன். எங்களுடன் இருந்த நீல் தான் அவர்கள் இருவருக்கும்  ஒருஆசிரியராக இருந்து வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தான்.
தான் சொந்தமாக வீடு கட்டி முடித்தவுடன் திருமணம் என்றான். அதுபோலவே இரு வருடத்திற்குள் புதிய வீட்டில் குடியேறும்நாளன்று அவனது திருமணம் நடந்தது. முதல் ஆண்டு அவன் தங்கைக்கு திருமணம் நடந்தபோது பெரும் பொருள் அவனேகொடுத்திருந்தான் . “பாய் இந்த வண்டிய மட்டும் நல்லா ஓட்ட கத்து கொடு. நான் ஊர்ல போய் ஒரு டெம்போ ஓட்டியாவதுபொழச்சிக்குவேன்” என்பான் .

ஒருநாள்  உணவு நேரத்தில் எதார்த்தமாக உணவு கூடத்தின் வெளியே சென்றேன். அது மதிய உணவு நேரம். வீரர்கள்சாப்பிட்டுவிட்டு தொட்டியில் போடும் தட்டுகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும். இல்லையெனில் உணவு நேரத்தின்போதுஅங்கிருக்கும் பத்து தொட்டிகளும் நிறைந்துவிடும். அவர்கள் எச்சில் தட்டுகளை போட இடம் இல்லாமலாகிவிடும். எனவேஉடனுக்குடன் அப்புறபடுத்த பணியாளர்கள் இருப்பர்.
நான் அன்று அங்கு சென்றபோது,  நமது தமிழ் அன்பர்கள் தட்டுகளை போடும் வீரர்களிடம் “சார் ஒன் டாலர் ப்ளீஸ்” எனக்கேட்டனர். அதை கண்ட எனக்கு கடும் கோபம். “ஏம்பா இப்படி பிச்சை கேட்டு மானத்தை வாங்குறீங்க,     இங்க தான் நல்ல சம்பளம்தாராங்களே?” என்றேன்.  “பாய் நாங்க குவைத்திலே இப்படி பத்தாயிரம் ரூபாய் சம்பாதிச்சோம்” என்றனர். இனிமேல்  இப்படிபிச்சை எடுத்து மானத்தை வாங்காதீர்கள் என்றேன் .
எங்களது கழிப்பறைகளில் தண்ணீர் இருக்காது. குளியலறை அருகில் தான் இருந்தது. நம்மவர்களுக்கு தண்ணீர் வேண்டுமெனகாலி பாட்டில்களில் குளியலறையிலிருந்து தண்ணீர் நிரப்பி செல்வோம். தண்ணீரை வீணாக்குவதை பார்த்தால் நான் கண்டிப்பேன்.குளியலறையில் முக சவரம் செய்பவர்கள் பலர்,  குழாயை திறந்தே வைத்திருப்பார்கள். எங்களில் சிலர் “குழாயை  மூடசொல்லி, தண்ணீரை வீணாக்காதீர்கள்” எனக் கேட்டுக்கொள்வோம்..
ஒருநாள் போர்க் லிப்ட் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். கோபால் தண்ணீர் பாட்டிலுடன் சென்று கொண்டிருந்தான். அவன் கழிப்பறைசெல்கிறான் என யூகித்தேன் .
  “கோபால் வா” என்றேன் .
 “கொஞ்சம் தண்ணி தாப்பா” என கேட்டேன்.  கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை தந்தான்.  மூடியை திறந்தபோது குளிர்சாதனபெட்டியிலிருந்து அப்போது தான் எடுத்திருக்கிறான் என கைகளில் பட்ட குளிர்ச்சி உணர்த்தியது. புதிய பாட்டில் அது.  நான், அதன்மூடியை  உடைத்த வாறே  “கோபால் எங்க போற?” எனக் கேட்டேன்.

“டாய்லேட் போறேன்”.

“அதுக்கு பிரிட்ஜ் ல இருந்து மினரல் வாட்டர் தான் வேணுமா உனக்கு குண்டி கழுவ ,எவ்ளோ காலி பாட்டில் இருக்கு அதுல தண்ணிகொண்டு போலாம் இல்ல”
அவன் தஞ்சை மாவட்ட விவசாயி.“உங்கூர்லதானே தண்ணி இல்லாம விவசாயி தற்கொலை செய்து சாகிறார்கள்” எனகோபத்துடன் கேட்டேன் .“இங்க நூறு பேரு இருக்காங்க எல்லாரையும் உன்னால திருத்த முடியுமா எவ்ளோ பேரு மினரல் வாட்டர் தான் கொண்டு போறாங்கதெரியுமா ?பாய்”என பதிலுக்கு  என்னிடம் சீறினான் .

“இங்க பாரு கோபாலு நீ என் பிரண்டு நீ முதல்ல திருந்து . மதத்தவ எல்லாம்தானா திருந்துவான்” என்றேன். முனுமுனுத்தவாறேகாலி பாட்டிலை தேடிச்சென்றான். என்னிடம் முன்னரே சிலர் சொல்லி வருத்தப்பட்டிருந்தனர்,  கழிப்பறைக்கு சிலர் பாட்டிலில்அடைத்த தண்ணீரை உபயோகிப்பதாக .
இந்த முகாமில் எங்களுக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை. ஒரு டாங்கர் லாரியில்  தண்ணீர் தீர ,தீர டைகிரிஸ் ஆற்றிலிருந்துகொண்டு வருவார் அதன் ஓட்டுனர். எகிப்து நாட்டை சேர்ந்தவர். அரண்மனை வளாகத்துக்குள் தான் தண்ணீர் நிரப்பும் இடமும்இருந்தது .காலை ஒன்பது மணிக்கு பகல் பணி துவங்கும். எட்டரைக்கு மணிக்கு போய் காலை உணவருந்திவிட்டு,   ஒன்பது  மணிக்குஎங்கள் ஸ்டோர்ஸ் மானேஜர் நடத்தும் பத்து நிமிட கூட்டத்திற்கு பின் தான்  வேலை துவங்கும். அது ஒரு நல்ல உத்தி. வெப்பம்அதிகமான நாட்களில் தண்ணீர் அதிகம் குடியுங்கள் எனவும் ,குளிரான நாட்களில் அதற்குரிய ஆடை அணியவும் ,தேநீர் குடிக்கவும்ஆலோசனை சொல்வார். அன்று செய்ய போகும் வேலைகளை தெளிவாக காலையிலேயே விவாதிப்போம்.

கடின பணி என்றால் உதவி கேட்கலாம். முடியாததை சொல்லிவிட்டால், 


 மாற்றுவழி குறித்தும் விவாதிப்போம . வேலை சீக்கிரம்முடிந்துவிட்டால்,  உடன் பணி செய்பவருக்கு உதவி செய்வோம். அப்படியும் அன்றைய பணி முடிந்துவிட்டால்,மானேஜரிடம் சொல்லிவிட்டு  ஓய்வு எடுக்க சென்று விடலாம்.எனக்கு எப்போதும் சீக்கிரமாகவே வேலை முடிந்துவிடும். நண்பன் லோகேஷ் தான் எனக்கான உணவையும் கொண்டுவருவான்.இரவுணவை உணவு கூடத்தில் நாங்கள் சாப்பிடுவதில்லை. நீராடி, ஆடை மாற்றி தங்கும் கூடாரத்தின் வெளியே  ஒரு மேஜையைபோட்டு, அதன் நடுவில் சிறிய விளக்கை வைப்போம் ,கேண்டில் லைட் டின்னர் போல. பின்னர்  உணவை பிரித்து, தட்டுகளில்வைத்து பேசிக்கொண்டே நிதானமாக சாப்பிடுவோம். கார்த்திக்கிற்கு இரவு பணி ஆதலால் சில நேரம் வந்துவிட்டு சீக்கிரமே சென்றுவிடுவான்.தங்கும் கூடாரத்தின் வெளியே நாங்கள் சாப்பிடும்போதுவேறு யாரையும் சேர்ப்பதில்லை . யாரும் எங்களுடன் வர விரும்பவும் இல்லை.


லோகேஷ் கடமை தவறாதவன். எப்போதும் தான் செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பான். எவ்வளவு கடினமானபணி என்றாலும், நண்பர்கள் நாங்கள் கடமையை சரியாக செய்யாதபோது  திட்டுவான். லோகேஷுக்கு திருச்சி பாலகரையில் வீடு.ஒருவருட சமையல்கலையில் பட்டய படிப்பு படித்தவன். உல்லாச கப்பல் பணிக்கு தேர்வாகி இருமுறை அமெரிக்க துணை தூதரகம்சென்று விசா கிடைக்காததால் இந்த பணிக்கு வந்திருந்தான்.

06-10-2013