Monday, 4 August 2025

Tsunami,(சுனாமி கடிதங்கள்) சிஜோ ,விஜி

 


Tsunami (சுனாமி)

      ஷாகுல், சுனாமி கட்டுரை படித்தேன். நான் இந்தியாவிற்கு வெளியே (சைப்ரஸில் வேலைக்காக)சென்ற என் முதல் பயணத்திற்கு சில நாட்கள் கழித்து நடந்த மாபெரும் பேரழிவு. அன்று ஊரில் இல்லாததால் அதன் முழுமையான தாக்கம் அப்போது புரியவில்லை. அந்த காலகட்டம் உங்கள் கட்டுரையைப் படித்தபின் ஞாபக அடுக்குகளிலிருந்து மேலெழுந்து வருகிறது.

சிஜோ அட்லாண்டா


இக்கா...இந்த கட்டுரை நல்லா இருக்கு.

கடல் உள்வாங்கிய கணத்தில் மீன் பிடிக்க  சென்ற  மக்கள்  , படகில்  சென்றவர்கள்  கடல் உள்வாங்கியதால்  கடலில் பின்னோக்கியபடியே  சென்றவர்கள், ஒரு Gut Feeling ( உள்ளுனர்வு) வழியா கப்பலை  கொச்சி  நோக்கி  செலுத்தியது  போன்ற செய்திகளே புனைவை நோக்கி தள்ளுகிறது.அவரவர்களுக்கு  என்ன நிகழுமோ  அப்படி நடந்தது .

இது ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் இக்கா.பிரபஞ்சம் , மனம் ,மனித  வாழ்வு  என எல்லாமே   கண துளிகளில் மாறியது,

துயரம் தாண்டி  இந்த கட்டுரை எனக்கு அன்மையா  இருக்கு.  நான் செய்திகளை  கேட்பதில்லை  , படிப்பதும் இல்லை,  ஆனால் சுனாமி  எச்சரிக்கை ஜப்பானில் வந்தது  என கேள்வி  பட்டபின் உங்களை நினைத்து  கொண்டேன் . தினமும் வணக்கம் என்ற குறுங்செய்தி  தொடர்பால்  நீங்கள் அனைவரும்  நலமுடன்  இருக்கீங்க என நினைச்சிட்டே.ன்.

விஜி சிங்கப்பூர் .



   சுனாமி எழும்போது ஆழ்கடலில் அந்த அலைகளின் உயரம் மூன்று மீட்டரும்,ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் நூறு மீட்டர்வரை இடைவெளி இருப்பதால் ஆழ்கடலில் செல்லும் கப்பல்களுக்கு பெரிய பாதிபில்லை. நான் தற்போது இருக்கும் கப்பல் (NS FRONTIER)VLGC (VERY LARGE GAS CARRIER .வகைகை சார்ந்த மிக பிராமாண்ட கப்பல். இருநூற்றி நாற்பது மீட்டர் நீளமும்,முப்பத்தி ஆறு மீட்டர் அகலமும் நீரிலிருந்து பன்னிரெண்டு  மீட்டர் உயரத்தில் இருக்கும் டெக்கிலிருந்து ஐந்து மாடி உயரம் கொண்டது. 

    

2011 புக்குஷிமா சுனாமியில் சின்னாபின்னமான கப்பல்களில் ஒன்று  

   சுனாமியை நாங்கள் உணரவே முடியாது ஆழ்கடலில். அதுவே கரையில் என்றால் இந்த பிரம்மாண்ட கப்பல் சுனாமிக்குமுன் சின்னாபின்னமாகிவிடும் .

நாஞ்சில் ஹமீது,

05 Aug 2025.



நடுக்கடலில்


No comments:

Post a Comment