சுனாமி நிறைய பழைய நினைவுகளைத் தூண்டியது. கடற்கரையிலிருந்து வெகுதூரம் உள்ளடங்கியுள்ள திருச்சி மாவட்டத்தில் இருப்பதால் தொலைக்காட்சி பார்த்துத்தான் அதுவும் மதியத்திற்கு மேல்தான் தெரிந்தது. ஆனாலும் அது ஏற்படுத்திய அழிவுகள் அதற்கடுத்தடுத்த நாட்களில்தான் தெரியவந்தது. வேளாங்கணணியில் உறவினர்கள் இருப்பதால் கொஞ்சம் உண்மையான தரவுகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் குளச்சல் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் நீர்மட்டம்குறைந்தவுடன் என்னமோ ஏதோ என்று கப்பலை கொஞசம் தள்ளி இயக்கிக்கொண்டு போனதால் தப்பித்தது என்பதெல்லாம் புதிய செய்திதான். என் பெரிய மகள் ஏழுமாத கைக்குழந்தை அப்போது. ஊரில் சேர்கிற குப்பை எல்லாத்தையும் கடல்யாடா போடுறீங்க என்று கடலன்னை நாடு நகரங்களை எல்லாம் குப்பைமேடாக்கிவிட்டது. ரோட்டில் போகும்போது நான் வியந்து பார்க்கும் விலையுயர்ந்த கார்கள் எல்லாம் சுருட்டிப்போடப்பட்ட குப்பைக்காகிதங்களாய் மாறிப்போனது. பெரும் பெரும் படகுகள் எல்லாம் சம்பந்தமே இல்லாத நகரத்தின் முக்கிய சாலைகளில் சரிந்து கிடந்தது. வெண்முரசில் துவாரகை அழிவதை நன்றாகவே உணரமுடிந்தது. பூகம்பம், எரிமலை, சுனாமி, மழைவெள்ளம், புயல் போன்ற ஐம்பூதஙகளில் யாராவது ஒருத்தர் நினைத்தாலும் நாம் பெற்றுக்கொள்வது பேரழிவையே.
டெய்சி,
திருச்சி .
சுனாமி கட்டுரைய வாசித்த பலரும் தங்களது நினைவுகளை எழுதியிருந்தனர். நண்பர் கணேஷ் மிக விரிவாக எழுதியிருந்தார்.அவரது அலுவலகத்தில் வேலை பார்த்தவரின் மகன் காணாமல் போய் இரு தினங்களுக்குப்பின் கிடைத்ததாகவும். வேறொருவரின் மகன் காணாமல்போய் இருபது ஆண்டுகளாகியும் இன்னும் திரும்பவில்லை என சொல்லியிருந்தார்.
குமரியில் கலக்டர் ஆக இருந்த திரு ககன் தீப் சிங் சுனாமிக்கு
இருதினங்களுக்கு முன் கடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிதாய் பதவியேற்றார் கலக்டர் ராஜகோபால். குமரியில் சுனாமிக்குப்பின் உரிய அரசு இயந்திரங்கள் செயல்படாமல் போகவே.
மூன்று தினங்களுக்குப்பின் அவரும் மாற்றப்பட்டு அனுபவம் மிகுந்த திரு சுனில்
பாலிவால் பணிக்கு வந்தார்.
குமரியை விட கடலூரில் சேதம் அதிகம் ககன் தீப்
சிங் மாவட்ட ஆட்சியர் பதவியேற்று அங்கே
நிறைய உதவிகளை உரியவர்களிடம் பெற்று கடலூர் மக்களுக்கு உதவினார்.
மும்பையிலிருந்து நண்பர் மைகேல் நண்பர்களிடம் சுனாமி நிதி வசூலித்து அனுப்பினார். ராணிதோட்டம் அருகிலிருந்த
காப்பகத்திற்கு சென்றிருந்தேன். சுனாமி அலையால் சில வினாடிகளில் பெற்றோரை இழந்த பதினெட்டு
வயதுக்குமேற்பட்ட பெண் பிள்ளைகளுக்காக புதிய காப்பகம் ஒன்று தக்கலை அருகில் துவங்கியிருப்பதை
அறிந்தேன். அதன் பொறுப்பிலிருந்த உமா மகேஸ்வரியை தொடர்புகொண்டபோது. தக்கலை பெண்
பிள்ளைகள் காப்பகத்திற்கு உணவு சமைக்க கேஸ் அடுப்பும்,வேறு சில பொருட்களும்
வேண்டினார்.
அங்கு தங்கியிருந்த பதினேழு பிள்ளைகளை பார்த்தேன். பெரும்பாலும் கல்லூரி
மாணவிகள்,கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர்கள் என .....
![]() |
மணக்குடி புதிய பாலம் |
சுனாமிக்கு மறுநாள் மணக்குடி பகுதியில் இடிபாடுகளுக்குள் பிணங்கள்
அகற்றப்படாமல் இருந்ததை கண்டேன். மணக்குடியிலிருந்து கன்னியாகுமரி செல்ல
நாகர்கோவில் வந்து செல்லும் நிலை இருந்தது. அவ்வூர் மக்களின் நீண்ட
கோரிக்கை,போராட்டங்களுக்குப்பின் புதிதாய் கட்டிய மணக்குடி பாலம்
காணமல்போயிருந்தது.
என் கிராமத்தில் வள்ளியாற்றில் குளித்துகொண்டிருந்த சிலரை சுனாமி கொண்டு
சென்றது. முதல் அலையில் சிக்கிய இளம்பெண்ணொருத்தியின் ஆடை இழுத்து செல்ல அடுத்த அலைக்குமுன்
ஆற்றிலிருந்து மேலே வருமாறு உடனிருந்த பெண்கள் கூச்சலிட மானம் பெரிதென ஆற்றிலேயே
நின்றவளையும் சுனாமி கொண்டு சென்றது.
கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தில் நான்கு பிள்ளைகளை சுனாமிக்கு பறிகொடுத்தாள்
தாய் ஒருத்தி. குடும்ப கட்டுப்பாடு செய்திருந்த அவள் மீண்டும் அறுவை சிகிச்சை
செய்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் மீண்டும் நான்கு குழந்தைகளை ஈன்றாள்.
நண்பர்களிடம் இன்னும் நேரில் கண்ட துயர
சம்பவங்கள் நிறைய இருக்கலாம்.
05- 08- 2025.
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment