Friday, 10 December 2021

கப்பல் காரன் நாட்குறிப்புகள்

உல்லாச கப்பல்
உல்லாச கப்பல் 


 நண்பர்களுக்கு ,

    கடந்த 2020 வருடம் அக்டோபர் பத்தாம் நாள் மீண்டும் நான் கப்பல் பணியில் இணைந்தேன் .அன்று முதல் தினமும் அந்தந்த நாட்களின் டைரி குறிப்புகளாக உள்ளதை உள்ளபடியே  எழுதினேன் .அதில் பன்னிரெண்டாவது நாளின் டைரியான கப்பாடியாவுக்கு கொரோனாவா எனும் பதிவை படித்தபின் நண்பர் கணேஷ் பெரியசாமி கப்பல் காரன் நாட்குறிப்புகளுக்கு  என தனியாக ஒரு வலைப்பூ  தொடங்கி நிர்வகித்து வருகிறார்.




        எனது இந்த வலைபூவுக்கு வரும் நண்பர்கள் சிலர் இதில் பதிவுகள் ஏதும் இல்லாமல் ஏமாற்றமடைவதாகவும் நீங்கள் ஏன் குறைவாக எழுதுகிறீர்கள் எனவும் கேட்டு கடிதம் எழுதினர்.கப்பலில் இணைந்த பின் இணைய வேகம் மிக குறைவாக இருப்பதால் எனது வலைபக்கத்தை திறக்கவோ,அதில் பதிவுகள் வெளியேற்றம் செய்யவோ முடியாது.



கப்பல் காரன் நாட்குறிப்புகள் இன்று வரை 87 பதிவுகள் வந்துவிட்டது.கப்பல் காரர்களின் வாழ்வு அவர்களை தவிர யாரும் அறியாமல் உள்ளது என அதை படித்த வாசகர்கள் எழுதிய கடிதங்கள் சொல்கின்றன.இந்த நாட்குறிப்புகள் கப்பல் பற்றியும்,அந்த பணியாளர்களின் சாகச வாழ்வுபற்றியும் பேசுகிறது.புதிதாய் கப்பல் பணியில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது இருக்கும் .

அதன் சுட்டியை இங்கே இணைக்கிறேன் நண்பர்கள் கப்பல் காரன் நாட்குறிப்புகளை படிக்கலாம் .

https://kappalkaran.wordpress.com/




ஷாகுல் ஹமீது ,

10-12-2021

No comments:

Post a Comment