சூழியல் கட்டுரைக்கு விருது.
செங்கால் நாரை அமைப்பு கடந்த நவம்பர் மாதம்(2022) கூழியல் குறித்து ஒரு கட்டுரை போட்டியை அறிவித்தது தமிழ் விக்கி தூரன் விருது பெற்ற கரசூர் பத்மபாரதி அந்த அறிவிப்பை எனக்கு அனுப்பி தந்தார். அப்போது நான் கப்பலில் இருந்தேன்.பணிக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் கடல் மாசு குறித்து நீலக்கடல் எனும் கட்டுரையை இருதினங்களில் எழுதி முடித்தேன்.
கப்பல் காரன் நாட்குறிப்புகளின் இணையாசிரியர் கணேசிடம்,பிழைகள் பார்த்து தரும்படி கோரினேன்.அவரது பணிகளுக்கிடையில் அதை மெய்ப்பு பார்த்து தந்தவர். ‘பூமியின் சுவாசப்ப்பை’ என தலைப்பை மட்டும் மாற்றியுள்ளேன், இதிலுள்ள தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது,என் மகள்களுக்கு வாசித்து காண்பித்தேன் என்றார். ‘பூமியின் சுவாசப்பை’ பொருத்தமான தலைப்புதான், நாஞ்சில் ஹமீது எனும் பெயரில் அதையே போட்டிக்கு அனுப்பினேன்.
டிசம்பர் மாத இறுதியில் போட்டி முடிவுகள் வந்ததபோது மூத்த சகோதரி தாவரவியல் பேராசிரியை லோகமாதேவி எழுதிய ‘தாவரகுருடு’ முதல் பரிசும் எனது ‘பூமியின் சுவாசப்பை’ கட்டுரை நான்காவது பரிசுக்கும் தேர்வாகியிருந்தது. போட்டிக்கு வந்த நூறுக்கணக்கான கட்டுரைகளில் பதிமூன்று கட்டுரைகளை செங்கால் நாரை பரிசுக்கு தேர்வு செய்தது.
தேர்வான பதிமூன்று கட்டுரைகளையும் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகமாக வெளியிட்டு,ஒரு எளிய விருது வழங்கும் விழாவையும் நடத்துகிறார்கள்.
நாகர்கோவிலில் இருந்து
சென்னை சென்று பரிசை பெற்றுவர இரு இரவுகள் பயணம் செய்ய இயலாத சூழல். எனவே என்
சார்பாக இலக்கிய வாசகரும்,விமர்சகருமான தம்பி
விக்னேஷ் ஹரிகரனிடம் பரிசை பெற்றுகொள்ள வேண்டினேன். பரிசு பெற்ற கட்டுரைகள் aramonline.in
இணைய இதழில் வெளிவரும். எனது கட்டுரையை இன்று மாலை விருது
விழாவுக்குப்பின் இந்த தளத்தில் பிரசுரிப்பேன்.
செங்கால் நாரை விருது விழா ,
இடம் சென்னை புத்தக கண்காட்சி,
YMCA- நந்தனம்,
காக்கை கூடு அரங்கம்,
எண் 589,590. மாலை நான்கு முப்பது மணி.
இது எனக்கு முதல் பரிசு.
ஷாகுல் ஹமீது,
12-01-2023
இதயபூர்வமான வாழ்த்துகள் அண்ணா
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் காகா!
ReplyDelete