Wednesday 1 April 2020

கக்கூஸ்




கப்பல் காரன் டைரி                         
                            

கக்கூஸ்
“பி டெக்கில் உள்ள ஸ்பெயர் கேபினில் கக்கூஸ் ப்ளஷ் வேலை செய்யவில்லை மாற்றவேண்டும் உனக்கு தெரியுமா”என இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி என்னிடம் கேட்டார். “தெரியாது” என்றேன்.
          
கப்பலின் தங்கும் அறையிலுள்ள குளியலறை

   கடந்த ஆண்டு பணியிலிருந்த கப்பல் யோயோ.பிப்ரவரியில் பணிக்கு சேர்ந்தேன்.மார்ச் மாதம் கப்பலின் குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாம் தளத்திலிருந்த இருந்த அறையின் கக்கூஸ் வேலை செய்யவில்லை.அதை சரி செய்யவேண்டுமென பிராங்கி சொன்னார்.அதற்கு இருதினங்களுக்கு முன்  அமெரிக்காவின் பிலேதெல்பியாவில் கப்பல் கரையணைந்த போது புதிதாக பணிக்கு சேர்ந்த இரண்டாம் அதிகாரி கார்த்திக் இரவில் அந்த அறையில் தங்கியிருந்தான்.காலையில் கக்கூஸ் போய்விட்டு ப்ளஷ் பட்டனை அழுத்தியபோது வேலை செய்யவில்லை.அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டான் .


     இரு தினங்களுக்கு பின் முதன்மை அதிகாரி மங்களூர் லோரன்ஸ் பிராங்கியிடம் அதுபற்றி சொல்ல.கக்கூஸ் பணி இயந்திர அறைக்கு வந்து சேர்ந்தது.கப்பலில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முதன்மை இன்ஜினியரின் தலைமையில் இயந்திர (engine dept) அறை துறைக்குத்தான் வரும் .எனவே உறுதியாக சொல்வேன் கப்பலுக்கு தலைவன் காப்டனாக இருந்தாலும் .கடவுள் முதன்மை இஞ்சினியர்தான் .கப்பலின்  பொறியியல் சார்ந்த அனைத்து பிரச்சனைக்கும் அவரே பொறுப்பு .
seawage treatment plant

  
                               
     
 காலை எட்டு மணி பணி ஆலோசனை கூட்டத்தில் கக்கூஸ் பணியை செய்வதென முடிவு செய்யப்பட்டது .கப்பலில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட தங்கும் அறைகளில் உள்ள கழிப்பறைகளிலிருந்து வெளியேற்றபடும் கழிவுகளை அப்படியே கடலில் கொட்டிவிட முடியாது .seawage treatment plant இல் முறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆழ் கடலில் மட்டுமே அந்த நீரை மட்டுமே வெளியேற்ற வேண்டும்.

                              

       இயந்திர அறையில் கழிவறை சுத்திகரிப்பு தொட்டி ஒன்று இருக்கும் .அது மூன்று அடுக்குகளால் ஆனது .கப்பலில் உள்ள அனைத்து கழிப்பறைகளிலிருந்தும் வெளியேற்றபடும் கழிவுகள் அந்த தொட்டியின் முதல் அறையில் வந்து சேரும். அதில் Gayamyzne 700FN எனும் ரசாயனம் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஊற்றி வைத்தால்,அதில் மனித கழிவுகளை சாப்பிட்டு வாழும் கிருமிகள் உருவாகி உள்ளேயே வாழ்ந்துகொண்டு இருக்கும்.கிராமங்களில் கழிப்பறை தேக்க தொட்டிகளை கட்டும்போது அதில் கழுதை விட்டையை போடுவார்கள் அதுவும் அந்த கிருமிகளை உருவாக்கும் . உள்ளே வரும் மனித கழிவுகளை அது சாப்பிட்டு உயிர் வாழும் .அதனால் தான் சோப்பு தண்ணீர் உட்பட வேறு எந்த ரசாயனமும் கழிப்பறைகளில் ஊற்ற கூடாது .அது அந்த கிருமிகளை கொன்றுவிட்டால் .கழிப்பறை தேக்க தொட்டி வெகு விரைவில் நிரம்பிவிடும் .
                        


    கப்பலின் கழிப்பறை தேக்க தொட்டியில்,முதல்,இரண்டாம் நிலை தாண்டி மூன்றாம்நிலை அறைக்கு வரும் நீரில் குளோரின் கலந்து கடலில் வெளியேற்றபடும்.அந்த தொட்டியில் பொருத்த்பட்டிருக்கும் உயர்நிலை சென்சாரை தண்ணீர் தொட்டவுடன் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டார் தானே இயங்கி கழிவு நீரை வெளியேற்றும்.அதனால் அந்த கழிவு தேக்க தொட்டி ஒருபோதும் நிரம்பி வழிய வாய்ப்பில்லை. எனது முதல் கப்பல் (2005) முப்பது ஆண்டு பழமையானது அதில்  கழிப்பறை சுத்திகரிக்கும் தொட்டியில் உள்ள உயர்நிலை சென்சார் வேலை செய்யாது .ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் கழிவுநீர் வெளியேற்றும் மின் மோட்டரை பத்து நிமிடத்திற்கு இயக்கவேண்டும் .ஒருநாள் ஒருவேளை அதை இயக்க மறந்ததால் அந்த அறை முழுவதும் கழிவுநீர் வழிந்தோடியது . மிக சிரமப்பட்டு பின்னர் அந்த தளம் சுத்தம் செய்யபட்டது .
                 

   
       எர்னாகுளம் கோபகுமார் அந்த கக்கூஸ் சரி செய்யும் பணியை முந்தைய கப்பலில் செய்ததாக சொன்னார். இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி முதலில் உதிரி பாகங்கள் இருக்கிறதா என பார்த்தபின் பணியை தொடங்குவோம் என்றார்.கப்பலில் எந்த பணியையும் துவங்கும் முன் தேவையான உதிரி பாகங்கள் இருக்கிறதா என பார்த்துவிட்டே பணியை துவங்க வேண்டும்.
பழைய கப்பல்களில் உள்ள கழிப்பறைகளில்  தண்ணீரை வேகமாக அடித்து வெளியேற்றும் அமைப்புதான் இருக்கும் .இப்போதைய நவீன கப்பல்களில் vacum flush கழிப்பறைகள் வந்துவிட்டன.vacum கழிப்பறைகள் இருக்கும் கப்பல் களில் தண்ணீர் செலவு மிக,மிக குறைவு தினசரி நான்கு முதல் ஆறு டன்கள் மட்டுமே .

         நான் ,பிராங்கி,கோபகுமார் மூவரும் உதிரிபாகங்கள்,மற்றும் உபகரணங்களுடன் சென்றோம்.காலையிலேயே டெக் பணியாளர் ஒருவர் “டாய்லட்டை சுத்தம் செய்து லோசன் ஊத்தி வெச்சிருக்கேன்” என சொன்னார் .

      முதலில் vacum சுவிட்ச் வேலை செய்கிறதா என பார்த்தோம் சுவிட்ச் வேலை செய்தது .ஆனால் வெற்றிடம் உருவாகி நீர் வெளியேறவில்லை .வெற்றிடத்தை உருவாகும் டயாப்ரம் கிழிந்து இருக்கலாம் என்பதை உறுதி செய்தோம் .சுவரில் அமரும் கோப்பையை கழற்றிஆக வேண்டும் தண்ணீர் மற்றும் ,காற்று இணைப்புகளை முன்பே நிறுத்தியிருந்தோம்.எம் 16 அளவுள்ள நான்கு போல்டு,நட்டுகளை கழற்றிவிட்டு கோப்பையை தனியாக எடுத்து கழிந்திருந்த ரப்பர் டயாப்ரம் மாற்றி கோப்பையை பொருத்தி இயக்கி பார்த்தோம் .மீண்டும் வேலை செய்யவில்லை.

      உள்ளே இருக்கும் control mechanism பாக்ஸ்ஐ மாற்றுவோம் என முடிவெடுத்தோம் .மீண்டும் கழற்றினோம் மிகச்சிறிய  போல்ட்டுகள்.allen key யை போட்டு கழற்ற போதுமான இடமில்லாததால் அந்த கண்ட்ரோல் பெட்டியை கழற்ற அதிக நேரம் ஆனது .புதிய கண்ட்ரோல் பெட்டியை பொருத்தியபின் கோப்பையை மீண்டும் பொருத்தி இயக்கி பார்த்தோம் vacum flush வேலை செய்தது .
இயந்திர அறையில் கம்ப்ரசர் ஒன்று ஓடி காற்றை நிரப்பி வைத்திருக்கும் .கழிப்பறையில் உள்ள சுவிட்ச் ஐ அழுத்தியதும்,கண்ட்ரோல் மெக்கானிசம் சமிக்ஞ்சையை பெற்று இயக்கும் போது சிறிது நீர் பீய்ச்சி அடிக்கும் அதே நேரம் டயாப்ரம் வேலைசெய்து வெற்றிடத்தை உருவாக்கும்போது கோப்பையில் உள்ள கழிவுகள்,நீர் மிக வேகமாக உள்ளிளுத்து கொள்ளும் .கண்டிப்பாக இது போன்ற கழிப்பறைகளில் பேப்பர் உட்பட எதையும் போடகூடாது .
  
   இரண்டாம் இஞ்சினியர் பிராங்கி இன்னும் ஒரு கண்ட்ரோல் பாக்சும்,ஒரு டயாப்ரமும் இருக்கிறது என்றார்.நான் பிராங்கியிடம் “நான்கு வருடம் இஞ்சினியரிங் ,ஒரு வருடம் கப்பலுக்கான மேற்படிப்பு,பயிற்சிகள் ,கிளாஸ் 2 சான்றிதழ் போன்ற பெரிய கல்வி தகுதி ,பணி அனுபவங்களுக்கு பின் கடைசில கக்கூஸ் வேல செய்ய வேண்டியதாயிற்றே”என்றேன் .சிரித்துக்கொண்டே “ஜகாஜ் கா நௌக்கிரி சப் குச் கர்ணா படுத்தா ஹ”என்றார் சிகரெட் துண்டு ,பேப்பர் போன்றவற்றை போட்டால் மொத்த கழிப்பறைகளும் உபயோகபடுத்த முடியாத நிலை ஆகிவிட்டால் காலையில் வயிற்றை பிடித்துகொண்டு சரியாவது வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை .

     கழிவுகள் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும் .ஒவ்வொரு குழாயாக கழற்றி  மனித கழிவுகளை சுத்தம் செய்த அனுபவங்களை கேட்டிருக்கிறேன் .குழாய் அடைப்பு ஏற்படாமல் இருக்க உயிரியல் ரசாயனங்களை ஒவ்வொரு மாதமும் எல்லா கழிப்பறைகளிலும் போட்டு குழாய்கள் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் சில மூன்றாம் இஞ்சினியர்கள் இருக்கிறார்கள்.

  ஷாகுல் ஹமீது ,
      1st april 2020

No comments:

Post a Comment