பர்போடோஸ் கடல் அனுபவம்
இன்று காலையில் எட்டு மணிக்கு கப்பல் துறைமுகத்தை நெருங்கிகொண்டிருந்தது .9 மணிக்கு கப்பலை
கட்டிவிட்டார்கள் .வேலை செய்துகொண்டிருந்தேன் .காஸ் திறப்பதற்காக மேலே வந்தேன்
.குடிஉரிமை அதிகாரிகள் கப்பலிலுருந்து சென்று கொண்டிருந்தார்கள் .எங்களது
சமையல்காரர் .கப்பல் மாலை யில் செல்லும்
எனவும் இரண்டு மணிக்குகுள் வெளியே செல்பவர்கள் வந்துவிடவேண்டும் என்றார் .
நான்
மகிழ்ச்சியில் கிழே சென்று வேலை முடித்து விட்டு போகலாம் என்றிருந்தேன் .2ம் என்ஜினியர்
நீ போக முடியாது நேற்றே போய்விட்டாய் என்றார் .நேற்று போகாதவர்கள்
இன்று போகட்டும் என்றார் .நான் போர்ட் ஆப் ஸ்பெயின் ல் 9 ம் தியதி போகலாம் என
இருந்தேன் .10 மணிக்கு பிறகு நீ விரும்பினால் போ என்றார்
விஜித் ,நான் ,பிருதிவிராஜன் ,ஈஸ்வர் |
மீன் சந்தை யில் மிகப்பெரிய மீன்களை
வைத்திருந்தனர் .அங்கிருந்த கடையில் நண்பர்கள் பீர் மற்றும் ரம் வாங்கி கொண்டனர் .கடை வீதி சுத்தமாகவும் ,அழகாகவும்
இருந்தது .
இது பார்போடோசின் மிகப்பெரிய
சுற்றுலா தலம் .நிறையவே வெளிநாட்டு பயணிகள் .15 முதல் 20 நிமிட நடைக்குபின்
.கடற்கரையை அடைந்தோம் .நீச்சல்குளம் போன்ற கடல் அலையே இல்லை நீல நிறத்தில் கடல்
நீர் ,சில பெண்கள் நீச்சல் உடையில் நின்று
கொண்டிருந்தனர் ஆடை மாற்றி கடலில்
இறங்கினோம் .
ஈஸ்வர் தான் முதலில் சென்றான் .அவனுக்கு இதுதான் முதல் கப்பல் ஜூனியர் இன்ஜினியர் மகிழ்ச்சியில் துள்ளி
குதித்தான் ,சர்க்கார் சுமன் தண்ணீரில் இறங்கவில்லை புகைப்படம்
எடுத்துகொண்டிருந்தான்,
அழகான கடற்கரை
இன்று உல்லாச கப்பல் எதுவும் வரவில்லை ஆதலால் கூட்டம் குறைவாக இருந்தது .பின்பு
படகு காரர் ஒருவர் எங்களை அணுகி பனானா ரைடு க்கு அழைத்தார் .50 அமரிக்க டாலர்
கேட்டார் 40 தருவதாக சொன்னோம் .பெட்ரோல் நிரப்பி வருவதாக சொன்னார் ..அவர்
திரும்பி வரும்போது மணி 1 ய்
நெருங்கியிருந்தது .நாங்கள் வரவில்லை என்றோம் 2 மணிக்கு கப்பலுக்கு
செல்லவேண்டி இருந்தது .அரை மணி நேரத்தில்
ரைடு முடிந்து விடும் என்றார் .ஒத்துகொண்டு போட் ன் பின்புறம் கட்டியிருந்த வாழை
பழ வடிவ ரப்பர் படகில் ஏறிகொண்டோம் நான் முன் இருக்கையில் அமர்ந்தேன்.
துவக்கத்திலேயே வேகமாக சென்றது
.ஈஸ்வர் மகிழ்ச்சியில் வானம் அதிர கத்தினான் .நீண்ட தூரம் சென்றது .பின்பு வேகமாக
செல்லும்போதே படகை வளைத்து திருப்பினார் நாங்கள் நால்வரும் கடலில் விழுந்தோம் .3 ம்
என்ஜினியர் பிரத்வி யின் கண் காண்ணாடி நீரில் விழுந்துவிட்டது .படகு ஓட்டுனர்
நீரில் குதித்து நீண்ட நேரம் தேடினார் .கடல் நீரில் அணிந்து பார்க்கும் காண்ணாடி
முலம் தரையில் கிடப்பதை கண்டுவிட்டார் .நானும் முதலில் தேடினேன் என்னால் முடியவில்லை
.ஆழம் அதிகம் இருப்பதாகவும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டுவந்து எடுத்து தருவதாக
சொன்னார் .
கப்பலுக்கு நேரம் நெருங்கிகொண்டிருந்தது அவர் அது 10,000 ருபாய் எனவும்
.படகு பயண துவக்கதில் சொல்லியிருந்தால் கண்ணாடி யை கழட்டி வைத்திருப்பேன் என்றார் .என் மனதில் கடிகார முள் ஈட்டி போல் குத்தி
கொண்டிருந்தது .
பிரத்வி நீங்கள் செல்லுங்கள் நான் அவர்கள் காண்ணாடி எடுத்து தந்த
பின் வருகிறேன் என்றார் .கடல் நீர் கண்ணாடி போல் தெளிவாக இருப்பதால் கிழே கிடப்பதை
பார்க்கமுடிந்தது அந்த இடத்தை மிதவையால் அடையாள படுத்தி விட்டு .திரும்பி கரைக்கு
வருகையில் கடலில் ஒருவர் கையில் சிறிய ஈட்டியால் மீன் பிடித்து கொண்டிருந்தார் .அவரிடம்
எங்கள் படகு ஓட்டுனர் விபரம் சொல்லி கண்ணாடியை எடுத்து தர வேன்டினார் .அவர்
எங்களுடன் வந்து நாங்கள் விட்டு சென்ற மிதவையின் அருகில் குதித்து தேடினார் ,படகு
ஓட்டுனரும் நானும்இணைந்து கொண்டு தேடினேன் .அவர் தரையில் கிடந்த கண்ணாடி யை
எடுத்துவிட்டார் .மீண்டும் தேடினார்கள் நான் வேண்டாம் எனது கண்ணாடி போனால்
பரவாயில்லை என்றேன் அதற்குள் அவர் தண்ணீரில் முழ்கியுருந்தார் நானும் அவர் கிழே
செல்வதையும் தரையில் இருந்து அவர் எடுப்பதையும் பார்த்துகொண்டிருந்தேன் .காண்ணாடி
கிடைத்துவிட்டது என சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த படகில் நண்பர்களை பார்த்து
கையசைத்தேன் .
தண்ணீருக்குள் அவர் நீந்தி
செல்வதை பார்த்தேன் ,கால்களில் நீச்சல் கவசம் அணிந்து ஆழமாக சென்று தரையில்
எடுப்பதை நான் தண்ணீரில் முழ்கியபடி மிக வியப்புடன் பார்த்துகொண்டிருந்தேன்
.அதுவரை வேகமாக அடித்து கொண்டிருந்த
அனைவர் இதயமும் சற்று குறைய ஆரம்பித்தது .3 ம் இன்ஜினியர் பிருத்வி நிம்மதி
பெருமூச்சுடன் உற்சாகமாக சிரித்தார் .படகிலிருந்து விஜித் ,ஈஸ்வர் , பிருத்வி
இறங்கி பனானா படகில் ஏறிகொண்டனர் .நானும் நீந்தி பனானா படகில் ஏறிக்கொண்டேன் .
கண்ணாடியை எடுத்து
தந்தவர் அருகில் வந்தார் .பிருத்வி அவரை பர்ர்த்து நன்றி ,மிக்க நன்றி ,நான் 10
டாலர் தருவேன் .கரைக்கு சென்றபின் இவரிடம் கொடுப்பேன் பெற்று கொள்ளுங்கள் என படகு
ஓட்டுனரை கை காட்டினார் .
அவரது முகத்தில்
எந்த மாற்றமும் இல்லை .வாங்க உங்களை அங்கெ விடுகிறோம் என்றபின் என்னருகில்
ஏறிக்கொண்டார் .அவர் ஈட்டியால் மீன் பிடித்து ஒரு மிதவையில் குத்தி கடலிலேயே
மிதக்கவிட்டு வைத்திருந்தார் .
படகு கிளம்பியதும் அனைவரும் உற்சாகமாகனோம் மீண்டும்
விண்ணதிர கத்தினோம் .அருகிலேயே மீன்களுடன் மிதவை மிதந்துகொண்டிருந்தது அவர்
இறங்கிக்கொண்டார் .
நன்றி சொல்லிவிட்டு படகு முழுவேகத்துடன் புறப்பட்டது
.ஹில்டன் ஹோட்டலை கடற்கரையிலேயே கட்டியிருக்கிறார்கள் அங்கு தங்கியிருக்கும்
சுற்றுலா பயணிகள் சன்பாத் எடுத்து கொண்டிருந்தனர் .அந்த இடம் ஹில்டன் ஹோட்டலுக்கு
சொந்தமானதாக இருக்கலாம் படகு சீறிபாய்ந்தது மணி 1.30 நெருங்கியிருந்தது .
ஈஸ்வர் அண்ணா நமது பயணம் முடியபோகிறதா
ம் என்றேன் .
மனித மனம் எப்போதுமே மகிழ்ச்சியையே விரும்புகிறது அது
நீடிக்க வேண்டும் எனவும் எண்ணுகிறது .தம்பி எதுவும் நிரந்தரமில்லை வாழ்வில்
எல்லாவற்றையும் கடந்து செல்ல கற்றுக்கொள்ளவேண்டும் .
அங்கே கரையில் சுமன் என்னவாகி இருப்பான் .தேடிக்கொண்டே
இருந்திருப்பான் .கடலில் போனவர்களை காணாமல் தவித்து போயிருப்பானோ என எண்ணினேன்
.இன்னும் தூரமிருக்கிறது கரைக்கு செல்ல .
பிருதிவி சொன்னார் மகிழ்ச்சியான பயணம் மறக்கமுடியாத அனுபவம்.
.ஈஸ்வர் கல்லூரியில் இருந்து நிகோபார் தீவுகளில் இதுபோல் போயிருக்கிறான் அந்த
அனுபவம் அவனுக்கு மேலும் உற்சாகமளித்தது .எங்கள் மூவருக்கும் இதுதான் முதல் முறை. அற்புதமான
பயணம் கரையை நெருங்கும்போது சுமன் மற்றும் அருகில் நின்றுகொண்டிருந்த கனடா
குடும்பத்தினரிடமும் கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தோம் .சுமன் உடை மாற்றி தயாராக
இருந்தான் நான் வருகிறேன் நீங்கள் மெதுவாக வாங்க என்றான் .
எனது 10 டாலர் என தந்தான் ,நானும் ,விஜித்தும் நீ ஏன் பணம்
தருகிறாய் நீ ரைடுக்கு வரவில்லை வேண்டாம் என்றோம் .மணி 1.40
ஆகியிருந்தது .என்னிடம் 1௦௦ டாலர் தான் இருக்கிறது என்றேன் என்னிடமும் 1௦௦ தான்
இருக்கிறது என்றார் பிருதிவி .சுமன் ,விஜித் , பிருதிவி தங்களிடம் இருந்த சில்லரை
எடுத்தபோது 50 டாலர் தேறியது 4௦ படகுக்கும் 10 கண்ணாடியை
எடுத்து தந்தவருக்கும் கொடுத்தோம் .
சுமன் எங்களை விட்டு போயிருந்தான் அனைவரும் உடை மாற்றினோம்
ஈஸ்வர் அண்ணா கேமரா தாங்க ,எதுக்கு அந்த பெண்களுடன் போட்டோ எடுக்கணும் .தம்பி
அவங்க சம்மதிக்கமாட்டாங்க நீச்சல் உடையில்
இருகாங்க வேண்டாம் .நான் போய் கேட்டுபார்கிறேன் .சரி போ என்றேன் .சென்ற வேகத்தில்
திரும்பி வந்தான் .
நாங்கள் கடற்கரைக்கு வரும்போது எங்களை பார்த்து ஹாய்
என்றாள் அதிலிருந்த ஒரு பெண் .ஒரு வயதான ஆணும் ,பெண்ணும் ,ஒரு இளம் ஜோடியும் ஒரே
குடும்பத்தினர் ஆக இருக்கலாம் .ஒரு பெண் தவிர மற்றவர்கள் கடலில் பீர் குப்பியுடன்
நின்றுகொண்டிருந்தனர் .
நான் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன் ஹாய் எப்படி
இருக்கீங்க என்றேன் ஆங்கிலத்தில் .நலம். நீங்க எப்படி இருக்கீங்க .நலம் என்றாள் .பார்படோஸ் முதல் முறையாக வருகீர்களா
இல்லை பலமுறை வந்துளோம் . கனடாவிலிருந்து வந்துள்ளோம் நீங்கள் என்றாள் .நான்
இந்தியாவிலிருந்து வருகிறேன் ,பார்படோஸ் முதல் முறை ஓ அப்படியா எத்தனை நாட்கள்
,நான் சிரித்துகொண்டே காலையில் வந்தோம் மாலை 5 மணிக்கு திரும்பி விடுவோம் கப்பலில்
வேலை செய்கிறோம் என தூரத்தில் தெரியும் எங்கள் கப்பலை காட்டினேன் .ஓ நைஸ் வொர்கிங்
ஹார்ட் .ம் விடை பெறுகிறேன் என்றேன் .ஓகே
நைஸ் டு மீட் யு என்றாள் .நானும் அதையே திருப்பி சொன்னேன் உங்கள் பெயரென்ன
காத்ரீன் .எனது பெயரையும் கேட்டாள் .
இங்குள்ள கடல் மணல் சுடவே இல்லை மணவாளகுறிச்சி மணலில்
வெறும் காலில் நடக்கவே முடியாது .நடந்து வேகமாக ரோட்டுக்கு வந்தோம் .விஜித்
நல்லகறுப்பு அவன் இப்போது கை இல்லாத பனியனும் காதில் கம்மல் ,கழுத்தில் குருசு
வைத்த சங்கிலி ,கூலிங்க் கிளாஸ் நாங்கள் சாலையில் நடக்கும் போது .அவனை பார்த்து
உள்ளூர் வாசி பார்படோசின் மொழியில் ஹாய் என்றார் நாங்கள் வந்த சாலையின் இணையான
சாலையில் நடந்தோம் மிகப்பெரிய கடைவீதி .சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு
வாங்கும் பொருள்களுக்கு வரி கிடையாது டாக்ஸி ஓட்டுனர்கள் எங்களை அணுகி டாக்ஸி
வேண்டுமா என கேட்டனர் .அழகான கடைவீதி புகைப்படம் எடுத்தபடி நடந்தோம் .
மணி 1.45
ஆகியிருந்தது .ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் அருகில் வரிசையாக நிறைய வேப்பமரங்கள் நின்றன
.நான் நண்பர்களிடம் இது இந்தியர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என்றேன் .பார்படோஸ்
பேருந்து நிலையத்தில் புகைப்படம் எடுத்தோம் .துறைமுக சாலையை அடைந்து கடலை ஒட்டியே
பூங்கா துறைமுக வாயில்வரை .சுள்ளென வெயில் கொளுத்தியது .வியர்வை வழிய
நடந்தோம் பூங்கா நிழலில் இதமான காற்று
வீசியது அங்கிருந்த சிமென்ட் நாற்காலியில் அமர்ந்தோம் .
ஈஸ்வர் ,பிருதிவிராஜன் |
.
ஷாகுல் ஹமீது .
Cool, I have a colleague from borbados. :-)
ReplyDeleteநன்றி வேலுபிள்ளை .
Deleteநட்பே நல்லது
ReplyDelete