Tuesday, 4 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் .9


  மேலை நாட்டவர் மெச்சும் நமது கலாசாரம் .
  கார்த்திக் நெருங்கிய நண்பன்  மும்பை அறையில் ஒன்றாக இருந்தோம்.அவனும்  மூன்று வருட சமையல்கலை படித்தவன் .முன்பு நட்சத்திர ஹோட்டல்களில்  வேலை பார்த்த அனுபவம் உள்ளவன் .
  ராயல் கரிபியன் என்னும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உல்லாச கப்பல் நிறுவனத்தில் பணிகிடைத்தபோதும் விசா கிடைக்கவில்லை .அடுத்து ஓராண்டுக்கு விசா விண்ணபிக்க இயலாததால் இங்கு வந்திருந்தான் .
முன்பு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் காரணமாக நல்ல ஆங்கிலம் பேசுவான் .

       அமெரிக்கர்களின் நாகரிகம் மெச்சும் படியாக இருக்கும் .யாருக்கும் எந்த இடையூறும் தராதவர்கள் .சாலையை கடக்க பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றால் வாகனத்தை நிறுத்தி போ என கையசைத்து சொல்வர் .அதை நான் வாகனம் ஓட்டும்போது நம்மூரில் செய்கிறேன் .ஆனால் நான் நிற்கும்போது பின்னால் வருபவர்கள் முந்தி சென்று விடுகிறார்கள் .அதனால் பாதசாரிகள் சாலையை கடக்க முடிவதில்லை .
    எது தன்னுடையது இல்லையோ அதை தொடவே மாட்டார்கள் .பொது இடங்களான உணவுக்கூடம் ,நூலகம் ,உடற்பயிற்சி நிலையம் ,தொலைபேசி ,நிலையம் போன்ற இடங்களில் லாஸ்ட் அண்ட் பௌன்ட் (lost and found )என ஒரு பெட்டி வைத்திருப்பார்கள் . அங்கு வருபவர்கள் மறந்துவிட்டு போகும் பேனா ,குடை ,கைப்பை ,பர்ஸ் போன்றவற்றை கண்டெடுப்பவர்கள் அந்த பெட்டியில் போட்டுவிடுவர் மறுநாள் சென்று தவறவிட்ட பொருளை அந்த பெட்டியில் இருந்து எடுத்துகொள்ளலாம் .
   முன்னால் வரும் யாரை பார்த்தும் தலை குனிந்து செல்லமாட்டார்கள் .புன்னகையுடன் கண்களை பார்த்து குறைந்தது ஒரு வணக்கம் அல்லது எப்படி இருக்கிறாய் என கேட்காமல் செல்வதே இல்லை யாரும் .
   எல்லாவற்றிற்க்கும் நன்றி சொல்வது ,சிறுபிழைக்கும்  மன்னிப்பு கேட்பது அவர்களது சிறப்பு குணங்கள் .
   மும்பை வாசிகளுக்கு மாதர் சோத் எப்போதும் உதட்டில் இருப்பது போல் இவர்களுக்கு திட்டுவதும் ,பாராட்டுவதும் எல்லாம் மதர் பக்கர் என்று தான் .
  அவர்களுக்கு ஒரே அதிசயம் எப்படி இந்தியர்கள் ஒரே வீட்டிற்குள் பல பேர் ஒன்றாய் வாழ்கிறீர்கள் என்பதும் ,ஒரே மனைவியுடன் ஒன்றாக பல ஆண்டுகள் வாழ்வதும் தான் .
  எங்கள் உணவு கூடத்தில் தினமும் ராணுவ வீராங்கனையோ ,வீரர்களோ பணியில் இருப்பர் .
   அன்று புதிதாக வந்த பெண்ணை பார்த்து கமல் அதிர்ச்சியடைந்து விட்டான் .முதலில் பார்த்த போது அசப்பில் தனது மனைவியின் சாயல் என்றான் .
    மஞ்சள் கலந்த இந்திய வெள்ளை  நிறமும் ,அழகான உடற்கட்டும் மலர்ந்த முகமும் கொண்டிருந்தாள் .சில மாதங்களுக்கு பின் அவளை காணவில்லை விசாரித்த போது அவள் கர்ப்பமடைந்து விட்டதால் விடுமுறையில் சென்றுவிட்டதாக சொன்னார்கள் .
   அவர்களுக்கு இது சாதரணமான விசயம் .ஏனனெனில் பணிக்கு இங்கு வந்த பெண்கள் பலரும் கர்ப்பமானது போலவே ,மனைவியை ஊரில் விட்டுவிட்டு பணிக்கு வந்த வீரர்களின் மனைவிமார்கள் அங்கு நிறையபேர் கர்பமடைந்து விட்டதாக செய்திகள் வந்தது .
   எங்கள் நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்றிருந்தது .அதனால் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்பார்வையில்தான் பணிகள் நடந்தது .
   எங்கள் உணவு கூடத்தில் சன்னி ,ஜெசிக்கா என இரு பெண்கள் உட்பட  அமெரிக்கநிறுவனம் சார்பாக பலர் பணியில் இருந்தனர் .
  சன்னி 100 கிலோ எடையுள்ள நல்ல உயரமான  குண்டான பெண் ,ஜெசிக்கா ஒல்லியான ,குள்ளமான உடல்வாகு கொண்டவள் இருவரும் கறுப்பிகள்.இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு .
  ஜெசிக்காவிற்கு ,மார்கல் ,மல்லிக் என இரு மகன்கள் .திருமணத்தில் விருப்பமில்லை குழந்தை தேவைபட்டது பெற்றுகொண்டோம் என்றார்கள் .
   ஜெசிக்கா நாங்கள் அனைவரும் விரும்பும் பெண் .அன்பானவள் எங்கள் குழுவின் சமையல் பணியில் எப்போதும் உதவி செய்பவள்  மலர்ந்த முகத்துடன் .கார்த்திதான்  அவளுக்கு தமிழ் கற்றுகொடுத்தான் .
  ஹாய் தம்பி வணக்கம் என்று தான் பெரும்பாலும் சொல்வாள் .
  நான் முதல் முறை விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தபின்தான் எனக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது .உணவுகூடத்தில்  சன்னியும் ,வேறு சில அமெரிக்கரும் கேட்டனர் .
   திருமணம் செய்துகொள்ள போகும் பெண்  உன் காதலியா அவள் என இல்லை என்றேன், முன்பே பழகியிருக்கிறாயா? வகையாறா கேள்விகள் .அப்போது ஜெசிக்கா விடுமுறையில் சென்றிருந்தாள் திரும்பிவந்தவள் விஷயம் அறிந்து என்னிடம் கேட்டாள் .ஷாகுல் நீ திருமணம் செய்துகொள்ள போகிறாயா ?ஆம் என்றேன் மீண்டும் அதே கேள்விகள் ,உன் காதலியா ,முன்பே அவளை தெரியுமா ,பழக்கம் உண்டா என .
  அடுத்து ஷாகுல் நீங்கள் எல்லாம் திருமணதிற்கு முன் சேர்ந்து வாழ்வதோ,உறவு வைத்து கொள்வதோ இல்லையா என ,அப்போது நமது மதுரை வீரன் அமர் சொன்னான் .இப்பதான் எங்கூர்ல திருமணத்திற்கு முன் பொண்ண பார்க்கவே முடியுது என் அப்பா காலத்துல முதலிரவுக்கு தான் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்பாங்களாம் .கண்ணுலேயே பொண்ணுகள காட்டமாட்டாய்ங்க .
   நீங்க திருமணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சிட்டு அப்புறம் திருமணம் ஆன உடன் டமால் னு விவாகரத்து .நாங்க கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதலிக்கவே ஆரம்பிப்போம்  அதுதான் எங்க திருமணங்கள் உடையாம இருக்கு என்றான் அமர் .அமர் இங்கிலாந்தில் ஹோட்டலில் மேலாளர் பணி கிடைத்தும்  இருமுறை விசா மறுக்கபட்டதால் இந்த வேலைக்கு வந்தவன் .
  அவனை வேறு ஒரு முகாமுக்கு அழைத்து செல்லும் போது பயணத்தின் நடுவில் இரவு தங்குவதற்காக திக்ரித் வந்தபோது எங்களை கண்டுகொண்டான் .மும்பையில் ஒன்றாக சில பணிகளுக்கு சென்றிருக்கிறோம் .நல்ல பழக்கம் இருந்தது .எங்களை பார்த்ததும் இங்கு வேலைசெய்ய விருப்பபட்டு .எங்கள் மேனேஜரிடம் கேட்டபோது உன் பணிக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண் இடுவாய் என கேட்டார் .7 என்றான் அமர் ஒத்து கொண்டு இங்கு இருக்க சம்மதித்தார் .அமர் சமையல் கலையில் 3 வருட பட்ட படிப்பும் நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்த அனுபவமும் பெற்றிருந்தான் .
  எங்களின்  மனிதவள மேம்பாட்டு மேலாளர் நியூசிலாந்தை சேர்ந்த நைஜிலிடம் ஒருவன் கேட்டான் சார் உங்களுக்கு திருமணமாகிவிட்டதா என .
  ஆம் பலமுறை என பதிலளித்தார் .நான்கு முறை திருமணம்  ஆனதாம் இப்போது தனியாக தான் வாழ்கிறேன் என்றார் .
    ஆலன் குக் இங்கிலாந்தை சேர்ந்தவர் .அவருக்கு 29 வயதில் மகன் இருப்பதாக சொன்னார் .ஒருமுறை விடுமுறைக்கு தாய்லாந்து சென்று வந்தவர் அங்கு பதினெட்டு வயது இளம்பெண்ணை மணந்துவிட்டு புது மாப்பிளையாக வந்தார் .
   எங்களிடம் உணவு எடுக்கவரும் ராணுவ வீரர் அல்லாத ஒரு அமெரிக்கர்  கொஞ்சம் வயதானவர் ,எப்போதும் இந்திய  கலாச்சாரத்தை மெச்சுவார் .இந்தியாவை போலவே தாய்லாந்திலும் திருமணதிற்கு பின் சேர்ந்தே வாழ்வார்கள் அதனால் அவர் தாய்லாந்து பெண்ணை மணந்துகொண்டு இருபது வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வதாக பெருமையுடன் சொல்வார் .
   அதுபோல் அமெரிக்க நிறுவனத்தின் வெள்ளைகார பெண் ஒருத்தி ஐம்பது வயதை நெருங்கியவள் .மகளுக்கு திருமணமாகி பேரபிள்ளைகளும் இருப்பதாக சொல்லுவாள் .ஆனால் நல்ல அழகு அந்த வயதிலும் .
     அங்கு சாப்பிட வரும் ஒருவருடன் நல்ல பழக்கம் ,முதலில் சகோதரன் என சொல்வாள் .கொஞ்ச நாட்களில் உணவுகூடத்திற்கு  வெளியே பொது இடத்தில் அவர்கள் ஓருடலாய் நிற்பதும் ,முத்தம் கொடுப்பதையும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை .
    விடுமுறையில் இருவரும் ஒன்றாக அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி வந்தபோது திருமணம் செய்து கொண்டதாக மோதிரத்தை காண்பித்தாள்.அவர்களுக்கு அந்த வயதிலும் ஒரு திருமணம் தேவை படலாம் அதற்காகவே உடலையும் ,அழகையும் பேணி காப்பார்கள் போல
    அதுபோல் லிசா .ஜெசிக்காவை போல் அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்பவள் , இரவு பணியிலிருக்கும் பெண் .நல்ல கறுப்பான, குட்டையான ,குண்டு பெண்மணி .யாருக்கும் அவளை பிடிக்காது .எங்களில் பலரை விரல் அசைத்து  அழைப்பதும்,கத்துவதும்,அவளது மொழியும்  காரணம் .
    அவளுக்கும் ராணுவ வீரன் ஒருவன் இங்கே காதலன் .இரவு பணியில் இருப்பதால். கமல் சொல்லித்தான் அவர்கள் லீலைகள் எங்களுக்கும் தெரியும் .சில நேரங்களில் கமல் போர்க் லிப்ட் வாகனத்தை ஓட்டி வரும் போது அடுமனை அருகில் ஒரு திருப்பம் அங்கே இருந்து கமல் என கத்துவாளாம் .கமல் உடனே வாகனத்தின் விளக்குகளை அனைத்து விடுவான் .
  லிசாவின் காதலன் வராத இரவுகளில் இருட்டில் வாகனம் ஓட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கில்லை .
  நான் அங்கிருந்து வந்தபின் எங்களுடன் இருந்த ஒரு இளம் இந்தியனை லிசா திருமணம் செய்துகொண்டு மும்பை வந்ததாக அறிந்தேன் .அவன் அமெரிக்க செல்ல வேண்டுமென கனவுடன் இருந்தவன் .
   இருந்தாலும் ஒழுக்கமானவர்கள் தான் நிறையபேர் இருந்தார்கள் .
  ஒடிஸ் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன் .
ஷாகுல் ஹமீது ,

03-10-2016

3 comments:

 1. தம்பி மேலை நாட்டவரகள் மெச்சும் நமது கலாச்சாரம் பதிவு சிந்திக்க வைக்குமொன்றாக இருக்கிறது.அவ்ரகள் போக்குவரத்தை மதிப்பதும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதும் தன்னுடையதல்லாததை தொடாததுமாய் ஏகத்திற்கும் நல்ல விஷயங்களாக அடுக்கி இருக்கிறீர்கள். பாலியல் சார்ந்த அவர்களின் கலச்சாரத்தயும் சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அது ஒழுக்கம் சார்ந்தது என்றோ ஒழுக்கமின்மை என்றோ நாம் வகைப்படுத்தமுடியாதென்றே நான் நினைக்க்றேன் தம்பி
  உண்மையில் ஒழுக்கதிற்கான வரையைரைகள் சமூகத்திற்கு சமூகம் இனத்திற்கு இனம் நாட்டிற்கு நாடு மாறிக்கொண்டே இருப்பதல்லவா?
  அவரவர் வாழ்க்கை என்பது அவரவர்களின் நியாயத்தின் பேரிலானதல்லவா?
  அந்த கறுத்த குண்டான விரல் சொடுக்கி அழைக்கும் எரிச்சலூட்டும் பாஷையில் பேசும் பெண்மணிக்கும் காதலன் இருகிறானல்லவா? காதலனின் கண்களின் வழியே பார்ககவேண்டும் போல காதலியை1!!

  நம்மில் ஒரே மனைவியுடன் 60,65 வருடம் வாழ்பவர்கள் சாதரண்மெனினும் அவர்களீன் லெள்கீக வாழ்வில் அவர்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று நாம் நிறைய பார்க்கிறோம். ஒரு்வரை ஒருவர் குத்திக்குதறிக்கொண்டு பலவருடம் வாழ்வது கலாச்சாரத்தைக்காப்பதற்காவா?
  இதை விட காரணம் சிறிதோ பெரிதோ விருப்பமில்லாத போது நண்பர்க்களாக பிரிவது சாலச்சிறந்ததல்லவா?
  நம் நாட்டில் வாழ்வியல் மற்றும் நடைமுறை சிக்கல்களால் தற்கொலை செய்துகொள்ளும் எத்தனை பெண்கள் ஏன் மணவிலக்கிற்கு தயாரவதில்லை?
  கலாச்சாரம் உயிருடன் தான் இருக்கிறது தம்பி. அதைக் காப்பற்றுவதற்காக நாம் பலரை இழந்த்திருக்கிறோம். இன்னும் இழக்கவும் போகிறோம்.என்னைப்பொருத்தவரை ஒழுக்கமென்பது எத்தனை பெண்களுடன் அல்லது எத்தனை ஆண்களுடன் வாழ்கிறோம் என்பதல்ல. எத்தனை இயல்பாகவும் சுதநதிரமாகவும் மனிதத்ன்மையுடனும் வாழ்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. வாழ்வது ஒருமுறையல்லவா?

  ஆஸ்திரேலியாவில் விண்ணப்ப படிவங்களில் இபோது are you married என்னும் கேள்விக்கு கீழே how many times? என்று சேர்த்திருக்கிறார்கள். polygamy and polyandry பண்டு பரவலாய் நடைமுறையில் இருந்த நாடல்லவா நம்முடையது்?
  கலாச்சார முகமூடிக்குள் அழுகிப்போன மனதோடு இருக்கும் நம்மவர்களைக்காட்டிலும் , காதலை மறுத்தால் குத்திகொள்ளும் நம்மவர்களைக்காட்டிலும் பிடிக்காதபோது விலகிக்கொள்ளும் இவரகள் மேலல்லவா?

  ReplyDelete
 2. @Logamadevi : நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தோழரே...

  ReplyDelete
 3. நம்மவர்களைக்காட்டிலும் பிடிக்காதபோது விலகிக்கொள்ளும் இவரகள் மேலல்லவா?

  ReplyDelete