Saturday, 29 September 2018

இந்தோனேசிய -சுனாமி

கடந்த இருபத்தி ஆறாம் தியதி இரவில் இந்தோனேசியாவின் தெலுக்சமாக்க எனும் எ இடத்திற்கு வந்து சேர்ந்தோம் , கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம் .மலைகாளால் மூன்று புறமும் சூழ்ந்திருக்கும்  கப்பலிலிருந்து தென்னை மரங்கள் அடர்ந்த கரைபகுதி பச்சை பசேலென தெரியும் .
       மறுநாள்  வியாழன் மாலை  கப்பலிலிருந்து ஒன்பதுபேர் வெளியே சென்றோம் .மாலை நான்கு மணிக்கு படகு வந்தது .லேசான அலையில் ஆடிகொண்டிருந்த மிகச்சிறிய  படகில் அனைவரும் லாவகமாக ஏறிக்கொண்டோம் .மிக மெதுவாக  நகர்ந்துகொண்டிருந்தது படகு  கரை நெருங்கிக்கொண்டே இருந்தது .அரை மணி நேரத்திற்கு பிறகு கரையை அடைந்தோம் .
     நாட்டினுள் நுழையும்   அனுமதி சீட்டு வாங்கி இரண்டு கார்களிலாக புறப்பட்டோம் .பாதுகாபுக்குக்கு ஒருவரும் ,வழிகாட்டியாக ஒருவரும் வந்தனர் .இசுலாமியர் அதிகமாக வாழும் நாடு இது .
   ஒன்றரை மணி நேர பயணம் செய்து ப்ரின்செவ் எனும் இடத்தை அடைந்தோம் .எந்த நோக்கமும் இன்றி நான் சென்றிருந்தேன் .ஒரு புதிய ஊரை பார்க்கும் ஆவலில் .கார் பயணம் எங்களூரில் சென்றதுபோலவே இருந்தது .பச்சை பசேலென வளைந்தும் நெளிந்தும் சிறிய ஓடைகளும் ,ஆறுகளையும் கடக்கும் பாலங்கள் .அடர்ந்த தென்னை ,வாழை  மரங்களும் .விழிஞ்சம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் சாலையை நினைவுறுத்தியது .
  ஓவ்வொரு நூறு மீட்டருக்குள்ளும் இரு பள்ளிவாசல்கள் இருக்கின்றன .செல்லும் வழியில் காரை நிறுத்தி பள்ளிவாசல் சென்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினேன் . ப்ரின்செவ் சென்றுவிட்டு  திரும்ப நள்ளிரவு இரண்டு மணியாகிவிட்டது .
   மறுநாள் மாலையில் இந்தோனேசியாவின்சுலோவேசி தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு  சுனாமியும் தாக்கியது .ஏழரை ரிக்டர்  அளவில் இருந்துள்ளது ..நானூறு உயிர்களை பலிவாங்கியுள்ளது ..
பலு என்னுமிடத்தில் ஆயிரம் கட்டிடங்கள் சரிந்துள்ளன ,டொங்கான என்னுமிடத்திலும் உடல்கள் கடற்கரையில் கிடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நான் இருக்கும் தெலுக்சமக்காவில் எதுவும் தெரியவில்லை .இங்கிருந்து இருநூறு மைல் தொலைவு என்றார்கள் .
 ஷாகுல் ஹமீது,
 30- september-2018

No comments:

Post a Comment