நண்பர்கள் அனைவருக்கும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.நேற்று எங்களூரின் கடற்கரை கிராமமான கேசவன் புத்தன்துறையில் மிக
சிறப்பாக நடக்கும் பொங்கல் விழாவில்
கலந்துகொள்ளும் நற்பாக்கியம் எனக்கு கிடைத்தது .குழந்தைகளும்,முதியவரும்,வாலிபர்களும்,பெண்டிரும்
நான்கு நாட்கள் மிக உற்சாகத்துடனும்,மகிழ்ச்சியுடனும்
கொண்டாடி வருகின்றனர் .
நேற்று இரவு ஏழரை மணிக்கு கேசவன் புத்தன்துறையிலிருந்து
வந்திருந்த நண்பர்களின் காரில் நானும் எழுத்தாளர் மீரான் மைதீன்அவர்களும் சென்றோம்
.கார் விழா மேடையை நெருங்கும்போதே ஒலி பெருக்கியில் சிறப்பு விருந்தினர்
வந்துவிட்டார்கள் அவர்களை
விழாகுழுவினர் எங்களை வரவேற்று பங்கு தந்தையின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர் .பங்குதந்தை முகமன் சொல்லி வரவேற்றார் பங்குதந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு .அங்கேயே இரவுணவுக்கு அழைத்தனர் .பின்னரே இரண்டாம் நாள் நிகழ்சிகள் தொடங்கின.
இது இங்கு நடைபெறும் 50 வது பொங்கல் விழா .மிக ஆச்சரியமாக இருந்தது எனக்கு .இந்த விழாவில் என்னை கலந்துகொள்ள அழைத்த மீனவ நண்பர் அன்த்ரியாசுக்கு வயது நாற்பதே இருக்கும் .விழா குழுவின் இளைஞர்கள் பலருக்கும் இன்னும் நாற்பதை எட்டாதவர்களே .
இங்கிருக்கும் கிறிஸ்துவ
ஆலயம் கட்டி ஐம்பத்து மூன்று ஆண்டுகள்
ஆகிறதாம் .இந்த கிராமத்தின் மூத்தவர்கள் தொடங்கிய பொங்கல் விழாவை இப்போதும்
இங்குள்ள இளையவர்கள் சிறப்பாக நடத்துவதால் ஊர் மக்கள் ,பங்குத்தந்தையின் ஆதரவும்,பங்களிப்பும்
விழா குழுவுக்கு கிடைத்ததில் எனக்கு வியப்பேதும் இல்லை .
ஒரு மீனவ கிராமத்தில்
கிறிஸ்துவ சமுதாய மக்களால் கொண்டாடப்படும் விழாவில் ,அவர்கள் சிறப்பு விருந்தினராக
அழைத்து கௌரவித்தது ஒரு இசுலாமியரை .(பிரபல எழுத்தாளர் மீரான் மைதீன் ).
மீரான் மைதீன் அவர்கள்
நாடகம் ,சிறுகதை ,நாவல்கள் ,திரைப்படம் என பல துறைகளில் இயங்கும் ஒரு ஆளுமை
.எனக்கு மிக நெருகிய நண்பர் .
பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள்
என்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது .
விழாவில் பேசிய மீரான் மைதீன்
அவர்கள் விவசாயிகள் அறுவடைசெய்து,புது பானையில் பொங்கலிடுவர்.மீனவ சமுதயாத்திற்கு கடல்தானே
வாழ்வாதாரம் ,மீன்தானே விளைபொருள்.
இங்கு நடக்கும் இந்த ஐம்பாதவது
பொங்கல்விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .இந்த விழாவை நடத்தும்
பலர் இந்த பொங்கல் விழா துவங்கியபோது பிறந்திருக்கவே இல்லை .
சிறப்பு விருந்தினர் மீரான் மைதீன் |
மேலும் எதற்காக இந்த பொங்கல்
விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து அகற்றினார்கள் என இப்போதுதான் புரிகிறது.இது
போன்ற விழாக்களால் மனித சமுதாயம் ஒற்றுமையாக ,மகிழ்ச்சியாக இருக்கிறது .ஆகவே இது
போன்ற விழாக்கள் மனித சமுதாயத்திற்கு தேவை என்றார் .
நான்கு நாட்கள் விழாவில்
நாங்கள் கலந்துகொண்டது இரண்டாம்நாள் .காலையில் ஐம்பது பானையில் பொங்கலிட்டு ,கோல
போட்டியும் நடந்துள்ளது .இரவில் சிறுவர்களுக்கான மாறுவேட போட்டியும் நடைபெற்றது.மாறுவேட
போட்டியில் கலந்துகொண்ட சிறுவர் ,சிறுமியரை விட அவர்களின் பெற்றோரே மிக
மகிழ்ச்சியுடன் இருந்ததை கண்டேன் .
மேலும் நீச்சல் போட்டி
,கட்டுமர போட்டி ,ஜோடி பொருத்தம் என அனைத்து வயதினருக்குமான விளயாட்டு போட்டிகளும்
நடைபெறயுள்ளது .
மேலும் பேச்சு போட்டியில்
வெற்றி பெற்ற சிறார்கள் மேடையில் பேசினார்கள்.பாட்டு போட்டியில் வென்ற சிறுவன் தனது பாடல் திறமையை வெளிபடுத்து இந்த
மேடை உதவியது . மாணவிகளின் சிறப்பு நடனமும் நடைபெற்றது .
பெரும்பான்மையான ஊர் மக்கள்
ஆலயத்தின் முன்பிருந்த மைதானத்தில் அமைதியாக ,மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சிகளை கண்டு
ரசித்துகொண்டிருன்தனர்.
மதங்களை கடந்து இது போல
நடைபெறும் விழாக்காளால் மனிதநேயமும் ,ஒற்றுமையும் வளர்கிறது .இதற்காக எத்தனை
விழாக்கள் வேண்டுமென்றாலும் நடத்தலாம் என அங்கிருந்து புறப்படும் முன் வேண்டிகொண்டேன்
.
தமிழர் திருநாளாம் பொங்கல்
வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை .
ஷாகுல் ஹமீது ,
நல்ல பதிவு மூத்தவரே. ஒரு கலாச்சார விழா இன்றைய சூழலில் ஐம்பது ஆண்டுகள் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் நீடிப்பது வியப்பேற்படுத்துகிறது. கேசவன் புத்தன் துறை நண்பர்களுக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் வருடங்களிலும் இப்பண்டிகை தொடரவும் உங்களுடன் இணைந்து கலந்து கொள்ளவும் விழைகிறேன்.
ReplyDeleteநன்றி சுரேஷ் ,நிச்சயம் வாருங்கள் வரும் ஆண்டுகளில் இணைந்தே கலந்து கொள்வோம்.
ReplyDeleteஷாகுல்
வரும் வருடங்களிலும் இப்பண்டிகை தொடரவும் உங்களுடன் இணைந்து கலந்து கொள்ளவும் விழைகிறேன்.
ReplyDeleteபொங்கல் விழா,கிறிஸ்துவ மீனவ நண்பர்கள் நடத்த,சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் மீரான் மைதீன் .
ReplyDeleteஅருமையான பதிவு, வேகமாக மாறிவரும் காலச்சூழலில் மதமும் இனமுமாய் போட்டிபோட்டுக்கொண்டு, மிச்சமிருக்கும் மனிதாபிமானத்திற்கும் பங்கம் வந்துவிடும் என்னும் அச்சம் பெருகிக்கொண்டிருக்கும் இன்னேரத்தில் இதுபோன்ற பதிவுகளே
ReplyDeleteஅருமருந்தாக இருக்கிறது. மதங்களைத்தாண்டியது பண்டிகைகள் மட்டுமல்ல உங்களுடையதைப் போன்ற பதிவுகளுமேதான் தம்பி. மேலும்மேலும் எழுத வாழ்த்துக்களுடன் தேவிக்கா