Monday, 11 July 2016

                (இயேசுவிடம் ) ரியோ –டி –ஜெனீரோ வில் ஒருநாள்
                       ----------------------------------------------------------------
   நவம்பர்  10 ம்  தியதி 2011ல்  நான் பணியிலிருந்த கப்பல் ஹார்மொனி ஏஸ் .
 மெக்ஸிகோ ,வெனிசுலா  ,கொலம்பியா , பிரேசில் ,உருகுவே ,அர்ஜென்டினா என ஓடிகொண்டிருந்தது .
   பிரேசில் ன் ரியோ டி ஜெனீரோ வுக்கு பலமுறை வந்திருந்தபோதும் மலையுச்சியில் இருக்கும் உலக புகழ் பெற்ற ஏசு மகானின்
வானுயர்ந்த சிலையை காணும் வாய்ப்பு நழுவிபோய்கொண்டே  இருந்தது .
இங்கு  வரும்போதெல்லாம் கப்பல் குறைவான நேரத்திலேயே சரக்குகளை ,இறக்கி,ஏற்றி சென்றுவிடும் அல்லது கப்பல் நிற்கும்போது மட்டுமே செய்யகூடிய பழுதுபார்ப்பு பணிகள் என 5 மாதங்கள் கடந்து விட்டன .
      அன்று அதிகாலையிலேயே கப்பல் ரியோ வை சென்றடைந்துவிடும் என்றார்கள் .
    ஷாஹுலே நீ இந்நு போவாம் 12 மணிக்கூறு கப்பல் இவிடே உண்டாவும் என என்னுடன் வேலை செய்யும் கேரளாவை சார்ந்த சரத் சேட்டன் சொன்னார் .அவர்  முன்பு ஒருமுறை போய்வந்த அனுபவத்தை பகிர்ந்த போது ,மனம் உற்சாகமாவதை உணர்ந்தேன் .
    பத்து மணிக்கு கப்பலை நங்கூரம் பாய்ச்சி  நிறுத்தி விட்டார்கள் .இங்கிருந்து பார்த்தால் தூரத்தில் இயேசு மகானின் சிலை தெரியும் . எப்போது துறைமுகம் செல்லும் என உறுதியான தகவல் இல்லை .
     மாலை வரை மனம் அதே உற்சாகத்துடன் இருந்தது .இரவு உணவுக்கு பின் உறுதியானது இனி செல்வது இயலாது என .
   பகல் முழுவதும் பணி செய்து உடல் களைத்திருந்தபோதும் நித்திரை கொள்ள மனம் மறுத்தது .
    11 மணிக்கு அறையிலிருந்து வெளியே சென்றேன் .என் தலைக்கு மேலே சந்திரன்  பிரகாசித்து கொண்டிருந்தான் .முழுநிலவு  நாள் .
    முழு நிலவு  ,மின்விளக்கு வெளிச்சம் பட்டு வெண்மையாக
தெரிந்தது இயேசுவின் சிலை .எண்ணங்களின்றி அதையே பார்த்துகொண்டிருந்தேன் சில நிமிடங்கள் .மனம் தானாகவே தன்னுள் இயேசுவிடம் ஒரு உரையாடலை நடத்தியது(மானசீகமாக )ஜீசஸ் எனக்கு உங்களை  பார்பதற்கு ஒரு வாய்ப்பு தரமாட்டீர்களா ?என மீண்டும் மனம் அமைதி .
   சில நிமிடங்கள் இயேசுவின் சிலையை பார்த்துகொண்டிருந்தவன் ,அறைக்கு சென்று மெத்தையில் சாய்ந்தவுடன் துயிலதொடங்கிவிட்டேன் .
   காலையில் கண்விழித்தபோது கப்பல் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தது .
  6 மணிக்கு சமயலறைக்கு சென்றேன் அதுதான் ,கப்பலில் நம்ப தகுந்த ,நம்ப தகாத தகவல்கள் கிடைக்குமிடம் .
   அப்போதுதான் இயந்திர அறையிலிருந்து பயிற்சி பொறியாளர் சேத்தன் ரமேஷ் வந்தான் .ஷாகுல் பாய் நாங்கள் இயேசுவின் சிலையை பார்க்க செல்கிறோம் .மகிழுந்து முன்பதிவு செய்துவிட்டோம் .6 பேர் மட்டுமே செல்லமுடியும் (ஆப்கா நாம் நஹியே காடி மே ஜகா புல் ஓஹகையா )உனது பெயர் இல்லை வண்டியில் இடம் இல்லாததால் என்றான் ஹிந்தியில் .
  அதை  கேட்டவுடன் ஏமாற்றமும் ,கோபமும் வந்தது .6 பேரில் இருவர் புதிதாக வந்தவர்கள் 15 நாட்களே ஆகியிருந்தது .அடுத்த 15 நாட்களில் நான் ஊர் செல்பவன் ,அதனால் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது .
    அவர்களுக்கு மீண்டும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.எனக்காக    விட்டுகொடுக்கும்படி அவர்களிடம் வேண்டுகிறேன் என சொல்லிகொண்டிருந்தேன் .
   எனது  உரத்த குரலை கேட்டு அங்கு வந்த எனது முதன்மை பொறியாளர் உக்ரைன் நாட்டை சார்ந்த செர்கி அவர்கள் என்ன என்று வினவினார் .
முதன்மை பொறியாளர் செர்கியுடன் 
 பெரிய மகிழுந்து வருகிறது நீயும் வரலாம் என்றார்.
    எட்டு மணிக்கு பணிக்கு சென்றேன் 2 ம் நிலை பொறியாளரிடம் அனுமதி பெற்று தயாரானோம் .என்னுடன்
கருட் பாஸ்கர் 
கருட் பாஸ்கர் மும்பையை சேர்ந்தவர் (அவருக்கு ஐடியா மணி என நான் பெயர் வைத்திருந்தேன் ),நான்காம் நிலை பொறியாளர் இலங்கையை சேர்ந்த வாரங்கே ,சேத்தன் மற்றும் முதன்மை பொறியாளர்  செர்கி என 5 பேர் மட்டுமே சென்றோம் .மற்றவர்கள் பணி காரணமாக வரவில்லை .

   10 மணிக்கு  சரியாக வண்டி கப்பல்  அருகிலிருந்து புறப்பட்டது .3 மணிக்கு முன்பாக திரும்பி கப்பலுக்கு வந்துவிடவேண்டும் .துறைமுக வாயிலில் இறங்கி அடையாள அட்டைகளை காண்பித்து ஒப்ரிகாடோ(நன்றி) என சொல்லிவிட்டு மீண்டும் ஏறிகொண்டோம் .
  தென்னமெரிக்காவின் பிரேசில் தவிர மற்ற நாடுகளில் ஸ்பானிஷ் மொழி பேசுவார்கள் .பிரேசில் மட்டும் போர்சுகீசியர்கள் ஆட்சி செய்தமையால் போர்ச்சுகீசிய மொழி .
    இங்கும் சாலையில் வாகனங்கள் காத்திருக்கும்போது வித்தை காட்டி பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்
.1 மணி நேர  பயணதிற்குபின்  பின் கார்கோடோவோ மலைக்கு செல்வதற்குரிய அனுமதி சீட்டு ,வாகன கட்டணம் வசூல் செய்யும் இடத்தை அடைந்தோம் .பிரசிலிய ரியால் செலுத்தி சீட்டுகளை வாங்கிவிட்டு .நாங்கள் வந்த காரை அங்கே நிறுத்திவிட்டு .அவர்கள் அழைத்து செல்லும் காரில் தான் செல்ல வேண்டும் .
சீட்டு வாங்குமிடம் 

 
ஈரானிய தம்பதிகள் 
அப்போதுதான் எனது சீட்டை கவனித்தேன்
 11-11-2011 ,11:15 am  என பதிவாகி இருப்பதை .
    அடுத்த 15 நிமிடங்களுக்குள் மலை உச்சியை அடைந்து விட்டோம் .அதிகம் படியேற தேவையில்லை .தானியங்கி படிக்கட்டுகள் ,மின் உயர்த்தி என அனைத்து வசதிகளும் இருக்கிறது .அதிகபட்சமாக 15 படிகள் கடைசியாக ஏறவேண்டும் .

   மலை ரயிலும் வருகிறது முன்பே இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் .அதிகமான கூட்டம் காணப்பட்டது .சுத்தமாக இருக்கிறது ,இவ்வளவு மக்கள் வந்து போகுமிடத்தில் எங்கும் குப்பைகள் இல்லை எவரும் குப்பைகளை வீசி எறிவதில்லை .
வாகன நிறுத்துமிடத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த சுற்றுலா தம்பதிகளிடம் வாரங்கே உரையாடினான் ஈரானின் பந்தர் அப்பாஸ் எனும் துறைமுகத்திற்கு முன்பு வந்துள்ளோம் என்றோம் .

     நல்ல நேர்த்தியான சிலை அமைப்பு கைகளை விரித்து மக்களை அழைக்கும் இயேசு மகான் , ஆனால் இயேசுவின் முகம் மட்டும் சரியாக அமையவில்லை என பேசிக்கொண்டனர் .

பாதிரியார் மற்றும் பொறியாளர் சிலை அருகில் வாரங்கே 

ஹெயடோர் டி சில்வா கோஸ்டே(heitor desilva coste) எனும் பொறியாளரும் ,(lardeal dom sebatio leme )செபஸ்டியோ எனும் கிறிஸ்துவ பாதிரியாரின் பெரும் முயற்சியால் இது உருவாகியுள்ளது .
  அங்கு காணிக்கை பெட்டி இல்லை ,அகர்பத்தி ,எண்ணை போன்ற சமாசாரங்கள் அங்கு இல்லை அங்கு வருபவர் அனைவரும் மலையுச்சியில் இருக்கும் அந்த அதிசய சிலையை கண்டு ரசிக்கிறார்கள் அவ்வளவே .

   
மேலிருந்து தூரத்தில் நிற்கும் எங்கள் கப்பல் மற்றும் இயற்கையை விரிவாக பார்க்க முடிந்தது .உலக கோப்பை நடந்த  கால்பந்து மைதானம் இன்னா பிற என ரசித்தோம்
சேத்தன் ரமேஷ் 
.
  
சேத்தனிடம் இரு பெண்கள் புகைப்படம் எடுத்து கேட்டனர்
வாரங்கே 
,வாரன்கேவும் அவர்களுடன் படம் எடுத்து கொண்டான் .
   மிக குறைந்த நேரமே அங்கு இருந்தோம் மணி 12.30 ஆகியிருந்தது செர்கி கிளம்புங்கள் என்றார் .
             அங்கிருந்து கீழிறங்கி பிரேசிலின் புகழ்பெற்ற
கோப்பகாபான கடற்கரையை அடைந்தோம் .நானும் வாரன்கேவும் பிரேசிலிய பையன்களுடன்
கால்பந்து விளையாடி , கடலில் குளித்து  
மகிழ்ந்தோம்.ஆண்களும்,பெண்களும் ,குழந்தைகளும் நீச்சல் உடையில் சூரிய குளியல் எடுக்கிறார்கள்.

   கடற்கரையை ஒட்டிய பிரதான சாலையில் வெப்பத்தை தணிப்பதற்காக தண்ணீரை மென்மையாக பீய்ச்சியடிக்கும் ஒரு விளம்பரபலகை என்னை வெகுவாக கவர்ந்தது .சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக வைத்துள்ளனர்
வெப்பத்தை தணிக்கும் குளிர்விப்பான் 
.
2 மணிக்கு மீண்டும் கிளம்புங்கள் என்றார் செர்கி  .உடைமாற்றி காரில் ஏறினோம் .வயிறு நன்றாக பசிக்க தொடங்கியது .

  சரியாக   3 மணிக்குள் கப்பலை வந்தடைந்தோம் .இரவு எட்டு மணிக்கு கப்பல் புறப்படும் நேரம் வெளியே வந்தேன் தூரத்தில் இயேசுவின் சிலை ஜொலித்து கொண்டிருந்தது . இயேசு மகானை பார்த்தவாறே வாழ்வில் எனக்கு கிடைத்த அரியதொரு நாள் என நன்றி கூறிக்கொண்டேன் .

     மீண்டும் 2013 ம் ஆண்டு இரவில் அங்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன் .
ஷாகுல் ஹமீது

11 ஜூலை 2016

9 comments:

  1. உடனிருந்து ரசித்தது போன்றதொரு அனுபவம்,. நன்றி சாகுல்

    ReplyDelete
  2. தரமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். நிறையவே தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பயண அனுபவங்களின் மூலம்

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுகிறேன் எழுத்தாளர் சுரேஷ் அவர்களே

    ReplyDelete
  4. தொடர்ந்து எழதுகிறேன் எழுத்தாளர் சுரேஷ் அவர்களே

    ReplyDelete
  5. நட்பே ,நல்லது

    ReplyDelete