பாஸ்ட் ட்ராக் –ன் சேவை மோசடி
கடந்த 2 ம் தியதி ஞாயிற்றுகிழமை
உறவினர் திருமணதிற்கு குடும்ப உறுப்பினர்கள் திருவனந்தபுரம் செல்ல வேண்டி
இருந்தது. நாகர்கோயில் பாஸ்ட் ட்ராக் ஐ அழைத்து ஒரு ஏ.ஸி தவேரா கார் வேண்டுமென கேட்டேன் .
ஏ.ஸி இல்லாமல் 2310 ரூபாயும்
,ஏ.ஸி காருக்கு 2470 ரூபாயும் என அங்கு பணியிலிருந்த பெண் கூறினாள்(6
மணிநேரத்திற்கு மட்டும்) .ஏ.ஸி தவேரா காரை அனுப்பிவைக்கும்படி சொன்னேன் .
குறிப்பிட்ட நேரத்தில் மாலை
நான்கு மணிக்கு கார் வந்தது பெண்களும் ,குழந்தைகளும் புறப்பட்டு சென்றனர்
.மறுநாள் 3 ம் தியதி திருமணதிற்கு செல்ல வேண்டியிருந்ததால் நான் அன்று செல்லவில்லை
.
அனைவரும் இரவு பத்துமணிக்கு
திரும்பி வந்தனர் .காரின் ஓட்டுனர் பாஸ்ட் ட்ராக்கில் அழைத்து கேட்டுவிட்டு வாடகை கட்டணம் 2500
ரூபாய் பெற்றுகொண்டார் .
என் மனைவி வீட்டிற்கு வந்ததும் வண்டியில் ஏ.ஸி சரியாக வேலை
செய்ததா என கேட்டேன் .காரில் ஏசியே இல்லை என்றாள் .
இங்கிருந்து புறப்பட்டவுடன்
ஓட்டுனரிடம் ஏ சியை போடசொன்னதும் காரில் ஏ ஸி இல்லை என சொல்லியுள்ளார் .ஆனால் ஏ ஸி
காருக்கான வாடகையை வசூலித்துள்ளார் .
இரவு பத்தரை மணிக்கு
நாகர்கோயில் பாஸ்ட் ட்ராக் ஐ அழைத்துகேட்டேன்
சார் எங்களுக்கு காரில் ஏ ஸி இல்லை என்பதே தெரியாது .ஓட்டுனர் சொல்லுவதை
வைத்து தான் நாங்கள் அனுப்பிவைத்தோம் என்றனர்.
அவர்கள் அனுப்பிவைக்கும்
வாகனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை பாஸ்ட் ட்ராக் நிறுவனம் அறிந்திருக்கவில்லை.
என்னிடம் அதிக கட்டணம் வசூலித்தது
பற்றி கேட்டபோது எனது தொலைபேசி எண்ணை பெற்றுகொண்டு ,காலையில் பேசுகிறோம் என்றனர் .
மறுநாள் மாலை நான்கு மணிவரை
அழைப்பு வரவில்லை .மாலையில் மீண்டும் நானே அழைத்தேன் .நான் வண்டி பதிவு செய்த பெண்
மறுமுனையில் பேசினாள். மேனேஜரிடம் பேசிவிட்டு அழைப்பதாக சொன்னாள்.அழைக்கவே இல்லை .
பின்பு நாகர்கோயில் பாஸ்ட்
ட்ராக் -ன் இன்சார்ஜ் அருண் என்பவர் வங்கி கணக்கை தாருங்கள் மீதி பணத்தை வங்கியில்
செலுத்தி விடுகிறோம் என்றார் . .கடந்த செவ்வாய்க்கிழமை வங்கிகணக்கை பெற்று கொண்டு இன்று வரை பணத்தை
திருப்பி தரவில்லை.
தங்களது ன் நிறுவனத்தை
நம்பி பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் பயணம் செய்யும் வாகனம் நிலைமையில்
இருக்கிறது ,பயணம் செய்ய உகந்ததா,வாடிக்கையாளரின் பாதுகாப்பு என எதிலும்
அக்கறையின்றி பாஸ்ட் ட்ராக் நிறுவனம் செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன் .
ஷாகுல் ஹமீது ,
09-04-2017.